காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிறந்தநாள்: தமிழக முதல்வர் விஜய் எக்ஸ் தளத்தில் வாழ்த்து
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தளப் பதிவில், “மதிப்பிற்குரிய மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். தாங்கள் நல்ல உடல்நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் மக்கள் பணிகளைத் தொடர வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை இல்லாத சூழலில், முதன்முதலில் ஆதரவுக் கரம் நீட்டி தவெக ஆட்சி அமைக்க உதவியது காங்கிரஸ் கட்சிதான்.
அதற்குப் பிரதிபலனாகக் காங்கிரஸுக்கு அமைச்சரவையில் 2 இடங்கள் ஒதுக்கப்பட்டன. தற்போது இண்டியா கூட்டணியில் தவெக இணைய வேண்டும் என்று காங்கிரஸ் விரும்பி வரும் சூழலில் முதலமைச்சரின் இந்த வாழ்த்து முக்கியத்துவம் பெறுகிறது.



