திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

காஞ்சிபுரம் அருகே ஆடித் திருவிழாவில் பயங்கரம்: முன்விரோதத் தகராறில் இருவர் வெட்டிக் கொலை

athibantv by athibantv
ஆகஸ்ட் 17, 2026
in Crime, Latest-news-tamil, Tamilnadu
A A
0
Two hacked to death following a dispute at a temple festival near Kancheepuram heavy police deployment.
📢 WhatsApp Channel Join
👁️ 1.1K Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

காஞ்சிபுரம் அருகே ஆடித் திருவிழாவில் பயங்கரம்: முன்விரோதத் தகராறில் இருவர் வெட்டிக் கொலை

காஞ்சிபுரம் அருகே படுநெல்லி கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு, இரட்டைக் கொலையில் முடிந்தது. திருவிழாவின் முதல் நாளான நேற்று இரவு, சந்துரு மற்றும் விக்கி என்கிற நீலகண்டன் ஆகிய இருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

படுநெல்லி கிராமத்தில் நேற்று ஆடித் திருவிழா தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியாக பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்ட பின்னர், இரவு சுவாமி வீதியுலா புறப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. அப்போது, போதையில் இருந்ததாகக் கூறப்படும் அதே பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள், ஒலிப்பெருக்கியில் கானா பாடல்களை ஒலிபரப்ப வேண்டும் எனக் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்து போலீஸார் வந்ததைத் தொடர்ந்து அந்தக் குழுவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related posts

Trump to focus on his own security Iran MP Ibrahim Assisi advises

ஹார்முஸ் விவகாரத்தில் சவால்களை விடுத்து சொந்த பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள்: ட்ரம்புக்கு ஈரான் எம்பி அறிவுரை

ஆகஸ்ட் 17, 2026
Arrest 56789

சென்னை லாட்ஜில் போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்த திரிபுரா இளைஞர் கைது

ஆகஸ்ட் 17, 2026

இந்நிலையில், ஏற்கெனவே இருந்த முன்விரோதத்தை அடிப்படையாகக் கொண்டு, அந்தக் கும்பல் சந்துரு மற்றும் விக்கி என்கிற நீலகண்டன் ஆகிய இருவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னேரிக்கரை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடல்களை மீட்க முயன்றனர்.

ஆனால், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போலீஸாரை தடுத்து நிறுத்தி, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததே சம்பவத்துக்கு காரணம் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் மேலும் பதற்றமான சூழல் நிலவியது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு போலீஸார் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொலையில் தொடர்புடையதாகக் கூறப்படும் தலைமறைவான நபர்களைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள பொன்னேரிக்கரை போலீஸார், கொலைக்கான முழுமையான காரணம் மற்றும் தொடர்புடைய நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், படுநெல்லி கிராமத்தில் தொடர்ந்து பதற்றம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கோயில் திருவிழா நடைபெறும் சூழலில் இரட்டைக் கொலை நடந்துள்ளதால், அப்பகுதியில் போலீஸ் கண்காணிப்பும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

📢 WhatsApp Channel Join

Related

Tags: CrimeTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • காஞ்சிபுரம் அருகே ஆடித் திருவிழாவில் பயங்கரம்: முன்விரோதத் தகராறில் இருவர் வெட்டிக் கொலை
  • ஹார்முஸ் விவகாரத்தில் சவால்களை விடுத்து சொந்த பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள்: ட்ரம்புக்கு ஈரான் எம்பி அறிவுரை
  • சென்னை லாட்ஜில் போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்த திரிபுரா இளைஞர் கைது
  • கோவை மாணவர் அமுதன் கொலைக்கு முன்விரோதமே காரணம்: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
  • லஞ்சம் கேட்ட போக்குவரத்து எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்: ஊழல் ஒழிப்பு பிரிவின் முதல் நடவடிக்கை
  • அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்: மஞ்சள் உத்தரீயம் கட்டாயம்
  • சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு
  • ‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்
  • ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி
  • உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவில் வைல்டுபெரிஸ் நிறுவனத்தின் 7 குடோன்கள் தீக்கிரை
Two hacked to death following a dispute at a temple festival near Kancheepuram heavy police deployment.

காஞ்சிபுரம் அருகே ஆடித் திருவிழாவில் பயங்கரம்: முன்விரோதத் தகராறில் இருவர் வெட்டிக் கொலை

ஆகஸ்ட் 17, 2026
Trump to focus on his own security Iran MP Ibrahim Assisi advises

ஹார்முஸ் விவகாரத்தில் சவால்களை விடுத்து சொந்த பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள்: ட்ரம்புக்கு ஈரான் எம்பி அறிவுரை

ஆகஸ்ட் 17, 2026
Arrest 56789

சென்னை லாட்ஜில் போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்த திரிபுரா இளைஞர் கைது

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp