திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

சென்னை லாட்ஜில் போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்த திரிபுரா இளைஞர் கைது

athibantv by athibantv
ஆகஸ்ட் 17, 2026
in Crime, Latest-news-tamil, Tamilnadu
A A
0
Arrest 56789
📢 WhatsApp Channel Join
👁️ 3K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

சென்னை லாட்ஜில் போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்த திரிபுரா இளைஞர் கைது

சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் போதைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படும் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து போதை மாத்திரைகள், ஹெராயின் பவுடர் மற்றும் தொடர்புடைய பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஹிதய் உசேன் (23), கோவிலம்பாக்கத்தில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி போதைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக மயிலாப்பூர் காவல் துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் சம்பந்தப்பட்ட லாட்ஜில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

Related posts

Minister Nirmal Kumarrt

கோவை மாணவர் அமுதன் கொலைக்கு முன்விரோதமே காரணம்: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026
Bribery

லஞ்சம் கேட்ட போக்குவரத்து எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்: ஊழல் ஒழிப்பு பிரிவின் முதல் நடவடிக்கை

ஆகஸ்ட் 17, 2026

சோதனையின் போது ஹிதய் உசேனை பிடித்து விசாரணை நடத்திய போலீஸார், அவர் தங்கியிருந்த அறையை சோதனையிட்டனர். அப்போது அறையில் ஏராளமான போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து 810 போதை மாத்திரைகள், 78 கிராம் ஹெராயின் பவுடர், போதைப் பொருள் பயன்படுத்துவதற்கான 200 குப்பிகள், 2 செல்போன்கள் மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து ஹிதய் உசேனை கைது செய்த தனிப்படை போலீஸார், அவரை ஜாம்பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக, கடந்த ஜூலை 17-ம் தேதி இதே லாட்ஜில் நடத்தப்பட்ட சோதனையில் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களிடமிருந்து 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் விற்பனை கும்பலுக்கு திரிபுராவைச் சேர்ந்த துஷார் உசேன் என்பவர் தலைவராக செயல்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது தலைமறைவாக உள்ள துஷார் உசேனை கைது செய்ய தனிப்படை அமைத்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த கும்பலுடன் தொடர்புடையவர்கள் யார், சென்னையின் எந்தெந்த பகுதிகளில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன என்பது குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: CrimeTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • சென்னை லாட்ஜில் போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்த திரிபுரா இளைஞர் கைது
  • கோவை மாணவர் அமுதன் கொலைக்கு முன்விரோதமே காரணம்: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
  • லஞ்சம் கேட்ட போக்குவரத்து எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்: ஊழல் ஒழிப்பு பிரிவின் முதல் நடவடிக்கை
  • அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்: மஞ்சள் உத்தரீயம் கட்டாயம்
  • சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு
  • ‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்
  • ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி
  • உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவில் வைல்டுபெரிஸ் நிறுவனத்தின் 7 குடோன்கள் தீக்கிரை
  • ‘வந்தே மாதரம்’ விவகாரம்: சோனியா காந்தியை கண்டித்து சென்னையில் பாஜக இளைஞரணி போராட்டம்
  • வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தல்
Arrest 56789

சென்னை லாட்ஜில் போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்த திரிபுரா இளைஞர் கைது

ஆகஸ்ட் 17, 2026
Minister Nirmal Kumarrt

கோவை மாணவர் அமுதன் கொலைக்கு முன்விரோதமே காரணம்: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026
Bribery

லஞ்சம் கேட்ட போக்குவரத்து எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்: ஊழல் ஒழிப்பு பிரிவின் முதல் நடவடிக்கை

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp