திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 11 வரை தமிழகம் முழுவதும் 1,577 ரவுடிகள் கைது

athibantv by athibantv
ஆகஸ்ட் 12, 2026
in Crime, Latest-news-tamil, Tamilnadu
A A
0
Arrest 56789
📢 WhatsApp Channel Join
👁️ 3.4K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 11 வரை தமிழகம் முழுவதும் 1,577 ரவுடிகள் கைது

குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் போலீஸார் மேற்கொண்ட சிறப்பு அதிரடி நடவடிக்கையில், சட்டம்-ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக இருந்ததாக அடையாளம் காணப்பட்ட 1,577 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சைபர் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் போலீஸார் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, குற்றங்களை முன்கூட்டியே தடுக்கும் வகையில் ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் மீதான கண்காணிப்பை டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தீவிரப்படுத்தியுள்ளார்.

Related posts

Yellow attire is mandatory for priests at the Ayodhya Ram Temple.

அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்: மஞ்சள் உத்தரீயம் கட்டாயம்

ஆகஸ்ட் 17, 2026
Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026

இதையடுத்து, கடந்த ஜூலை 29-ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் சிறப்பு கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் நடைபெற்றன. இந்த நடவடிக்கையில் ரவுடிகள் மற்றும் பல்வேறு குற்றப் பின்னணி கொண்டவர்கள் என மொத்தம் 52,279 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட 1,577 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதே காலகட்டத்தில், பிணையில் வெளிவர முடியாத வகையில் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணைகளை நிறைவேற்றவும் போலீஸார் சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என 3,288 பேர் மீதான பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிலுவையில் உள்ள பிணையில் வெளிவர முடியாத பிடியாணைகளை நிறைவேற்றுவதுடன், தலைமறைவாக இருக்கும் ரவுடிகளை கண்டறிந்து கைது செய்யவும் போலீஸார் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மாநகர காவல் ஆணையாளர்கள், மாவட்ட எஸ்.பி.க்கள் மற்றும் சிறப்பு பிரிவு அதிகாரிகள், ரவுடிகள் மற்றும் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

வழக்கமான சோதனைகள், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தீவிர கண்காணிப்பு மூலமாக குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுத்து, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலீஸாரின் தொடர் நடவடிக்கைகளால் ரவுடிகள் மீதான கண்காணிப்பு வலுப்பெற்றுள்ளதுடன், நிலுவையில் இருந்த பிடியாணைகளும் அதிக அளவில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சட்டம்-ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களை இலக்காகக் கொண்டு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் போலீஸாரின் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: CrimeTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்: மஞ்சள் உத்தரீயம் கட்டாயம்
  • சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு
  • ‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்
  • ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி
  • உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவில் வைல்டுபெரிஸ் நிறுவனத்தின் 7 குடோன்கள் தீக்கிரை
  • ‘வந்தே மாதரம்’ விவகாரம்: சோனியா காந்தியை கண்டித்து சென்னையில் பாஜக இளைஞரணி போராட்டம்
  • வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தல்
  • பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது
  • ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ தீவிர விசாரணை: சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு
  • அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து: ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து
Yellow attire is mandatory for priests at the Ayodhya Ram Temple.

அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்: மஞ்சள் உத்தரீயம் கட்டாயம்

ஆகஸ்ட் 17, 2026
Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Union Minister Kiren Rijiju’s remarks

‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp