திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

சென்னை | முந்திச் செல்வதில் ஏற்பட்ட தகராறு: அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; இருவர் கைது

athibantv by athibantv
ஜூலை 28, 2026
in Crime, Latest-news-tamil, Tamilnadu
A A
0
Arrest 56789
📢 WhatsApp Channel Join
👁️ 3.7K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

சென்னை | முந்திச் செல்வதில் ஏற்பட்ட தகராறு: அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; இருவர் கைது

சென்னையில் பேருந்தை முந்திச் செல்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை தாக்கியதாக இருவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மாநகர அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருபவர் மாதவன் (26). இவர் நேற்று மதியம் தடம் எண் 28பி அரசு பேருந்தை எழும்பூரில் இருந்து எண்ணூர் நோக்கி இயக்கிச் சென்றார்.

Related posts

Thirumavalavan

திருமாவளவனுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து: சமூகநீதிப் பணிகள் சிறக்க வாழ்த்துரை

ஆகஸ்ட் 17, 2026
Two hacked to death following a dispute at a temple festival near Kancheepuram heavy police deployment.

காஞ்சிபுரம் அருகே ஆடித் திருவிழாவில் பயங்கரம்: முன்விரோதத் தகராறில் இருவர் வெட்டிக் கொலை

ஆகஸ்ட் 17, 2026

அந்த பேருந்து சிந்தாதிரிப்பேட்டை ஏ-1 பார்சல் அலுவலகம் அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த ஒரு இருசக்கர வாகனம் பேருந்தை முந்திச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது பேருந்து ஓட்டுநர் வழிவிடாமல் சென்றதாகவும், சில மீட்டர் தூரத்துக்கு பின்னர் இருசக்கர வாகனம் பேருந்தை முந்திச் சென்றதாகவும் தெரிகிறது.

இதையடுத்து பேருந்து ஓட்டுநர் மாதவன் தொடர்ந்து ஹாரன் அடித்துக் கொண்டே சென்றதாக கூறப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் ஆத்திரமடைந்து பேருந்தை நிறுத்தி, “எதற்காக ஹாரன் அடித்தாய்?” என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் ஏற்பட்ட மோதலில், பேருந்து ஓட்டுநர் மாதவனை அவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதை தடுக்க முயன்ற நடத்துநர் சத்யாவையும் தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஓட்டுநர் மாதவன் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சேப்பாக்கம் லாசல் தெருவைச் சேர்ந்த லிங்கன் (43), சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த நந்தகுமார் (52) ஆகிய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: CrimeTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • திருமாவளவனுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து: சமூகநீதிப் பணிகள் சிறக்க வாழ்த்துரை
  • காஞ்சிபுரம் அருகே ஆடித் திருவிழாவில் பயங்கரம்: முன்விரோதத் தகராறில் இருவர் வெட்டிக் கொலை
  • ஹார்முஸ் விவகாரத்தில் சவால்களை விடுத்து சொந்த பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள்: ட்ரம்புக்கு ஈரான் எம்பி அறிவுரை
  • சென்னை லாட்ஜில் போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்த திரிபுரா இளைஞர் கைது
  • கோவை மாணவர் அமுதன் கொலைக்கு முன்விரோதமே காரணம்: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
  • லஞ்சம் கேட்ட போக்குவரத்து எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்: ஊழல் ஒழிப்பு பிரிவின் முதல் நடவடிக்கை
  • அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்: மஞ்சள் உத்தரீயம் கட்டாயம்
  • சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு
  • ‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்
  • ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி
Thirumavalavan

திருமாவளவனுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து: சமூகநீதிப் பணிகள் சிறக்க வாழ்த்துரை

ஆகஸ்ட் 17, 2026
Two hacked to death following a dispute at a temple festival near Kancheepuram heavy police deployment.

காஞ்சிபுரம் அருகே ஆடித் திருவிழாவில் பயங்கரம்: முன்விரோதத் தகராறில் இருவர் வெட்டிக் கொலை

ஆகஸ்ட் 17, 2026
Trump to focus on his own security Iran MP Ibrahim Assisi advises

ஹார்முஸ் விவகாரத்தில் சவால்களை விடுத்து சொந்த பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள்: ட்ரம்புக்கு ஈரான் எம்பி அறிவுரை

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp