திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

தமிழக பட்ஜெட் 2026: அரசு சேவைகள் விரைவில் கிடைக்க ‘சேவை உரிமை சட்டம்’ அறிமுகம்

athibantv by athibantv
ஆகஸ்ட் 6, 2026
in Tamilnadu, Latest-news-tamil
A A
0
Target to borrow Rs 1.73 lakh crore in the 2026-27 fiscal year.
📢 WhatsApp Channel Join
👁️ 722 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

தமிழக பட்ஜெட் 2026: அரசு சேவைகள் விரைவில் கிடைக்க ‘சேவை உரிமை சட்டம்’ அறிமுகம்

தமிழக அரசின் முதல் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில் அரசு சேவைகளை பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் வழங்கும் வகையில் ‘சேவை உரிமை சட்டம்’ கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் சேவை வழங்கும் முறையை நவீனப்படுத்தவும், நிர்வாக செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு நிர்வாகத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள தலைமைச் செயலாளர் தலைமையில் ஆளுமை செயல்முறை சீர்திருத்தக் குழு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Anbumani

மாநகரப் போக்குவரத்தில் 1,797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிக்க பாமக தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு

ஆகஸ்ட் 17, 2026
Australia – Bangladesh

வங்கதேசத்திடம் ஆஸ்திரேலியா வீழ்ந்ததால் அதிர்ச்சி; டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கேள்வி

ஆகஸ்ட் 17, 2026

சட்டத்தின் அடிப்படையில், பொதுமக்கள் கேட்கும் அரசு சேவைகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் சேவை உரிமை சட்டம் இயற்றப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு, பொதுவிநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்காக ரூ.718 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுவிநியோக திட்டத்தின் மூலம் பொட்டலமிட்ட கோதுமை மாவு வழங்கும் முன்னோடி திட்டம் ரூ.18 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு விரிவுபடுத்தப்படும். உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு ரூ.14,830 கோடியும், உணவு மானியத்துக்காக ரூ.14 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ரூ.40 கோடி செலவில் 2,500 ஹெக்டேர் பரப்பளவில் புதிய அலையாத்தி காடுகள் உருவாக்கப்படும்.

நெய்தல் மீட்சி இயக்கத்துக்காக மொத்தம் ரூ.322 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறைக்கு ரூ.1,762 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் ரூ.50 கோடி மதிப்பீட்டில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 8 முதல் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சி வழங்க ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் 500 வீரர்களுக்கு நிதியுதவி வழங்க கூடுதலாக ரூ.22 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கிராமிய விளையாட்டு போட்டிகளை நடத்த ரூ.42 கோடியும், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.2 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புகள் மூலம் அரசு சேவைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பட்ஜெட் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: BudgetTamilnaduTVK-NEWS

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • மாநகரப் போக்குவரத்தில் 1,797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிக்க பாமக தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு
  • வங்கதேசத்திடம் ஆஸ்திரேலியா வீழ்ந்ததால் அதிர்ச்சி; டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கேள்வி
  • அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர் பணியிடங்களை இருமடங்காக உயர்த்த கோரிக்கை
  • திருமாவளவனுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து: சமூகநீதிப் பணிகள் சிறக்க வாழ்த்துரை
  • காஞ்சிபுரம் அருகே ஆடித் திருவிழாவில் பயங்கரம்: முன்விரோதத் தகராறில் இருவர் வெட்டிக் கொலை
  • ஹார்முஸ் விவகாரத்தில் சவால்களை விடுத்து சொந்த பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள்: ட்ரம்புக்கு ஈரான் எம்பி அறிவுரை
  • சென்னை லாட்ஜில் போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்த திரிபுரா இளைஞர் கைது
  • கோவை மாணவர் அமுதன் கொலைக்கு முன்விரோதமே காரணம்: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
  • லஞ்சம் கேட்ட போக்குவரத்து எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்: ஊழல் ஒழிப்பு பிரிவின் முதல் நடவடிக்கை
  • அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்: மஞ்சள் உத்தரீயம் கட்டாயம்
Anbumani

மாநகரப் போக்குவரத்தில் 1,797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிக்க பாமக தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு

ஆகஸ்ட் 17, 2026
Australia – Bangladesh

வங்கதேசத்திடம் ஆஸ்திரேலியா வீழ்ந்ததால் அதிர்ச்சி; டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கேள்வி

ஆகஸ்ட் 17, 2026
Two-Day Extension to Apply for MBBS and BDS Courses

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர் பணியிடங்களை இருமடங்காக உயர்த்த கோரிக்கை

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp