திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

திருவாரூரில் தலைமைக் காவலரை தாக்கிய தவெக வழக்கறிஞர் அணி நிர்வாகி கைது

athibantv by athibantv
ஆகஸ்ட் 13, 2026
in Political, Crime, Latest-news-tamil, Tamilnadu
A A
0
TVK legal wing functionary arrested for assaulting a head constable in Tiruvarur.
📢 WhatsApp Channel Join
👁️ 571 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

திருவாரூரில் தலைமைக் காவலரை தாக்கிய தவெக வழக்கறிஞர் அணி நிர்வாகி கைது

திருவாரூரில் தலைமைக் காவலரை தாக்கியதாக தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ராஜேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். காவலர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை நன்னிலம் கிளைச் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

திருவாரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ், தமிழக வெற்றிக் கழகத்தில் வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார். நேற்று அவர் தனது இருசக்கர வாகனத்தில் திருவாரூர் நீதிமன்ற வளாகத்துக்கு சென்றுள்ளார். அப்போது போலீஸார் வாகனங்களை நிறுத்தும் இடத்திற்கு அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்துவதற்காக சென்றதாக கூறப்படுகிறது.

Related posts

Possibility of heavy rain

செங்கல்பட்டு, விழுப்புரத்தில் ஆக.18-ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

ஆகஸ்ட் 16, 2026
Arrest 56789

சேலையூர் அருகே 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் போக்சோவில் கைது

ஆகஸ்ட் 16, 2026

அந்த பகுதியில் போலீஸ் வாகனத்தில் தலைமைக் காவலர் வினோத் அமர்ந்திருந்தார். அப்போது ஜிப் அருகே இறந்த நிலையில் கிடந்த நாயை அப்புறப்படுத்துமாறு ராஜேஷ், தலைமைக் காவலர் வினோத்திடம் கூறியுள்ளார். அதற்கு வினோத், “இது எனது வேலை இல்லை” என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் அதிகரித்த நிலையில், அங்கு இருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதன் பின்னர் வழக்கறிஞர் ராஜேஷ், தலைமைக் காவலர் வினோத்தை பின்தொடர்ந்து சென்றதாக கூறப்படுகிறது. நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே வந்தபோது வினோத்தை ராஜேஷ் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தலைமைக் காவலர் வினோத், திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், வழக்கறிஞர் ராஜேஷ் (34) என்பவரை நேற்று இரவு கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ராஜேஷை போலீஸார் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவரை நன்னிலம் கிளைச் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, இன்று அதிகாலை ராஜேஷ் நன்னிலம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

வழக்கறிஞருக்கும், தலைமைக் காவலருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்ந்து தாக்குதல் சம்பவமாக மாறிய நிலையில், திருவாரூர் நீதிமன்ற வளாகம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: CrimePoliticalTamilnaduTVK-NEWS

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • செங்கல்பட்டு, விழுப்புரத்தில் ஆக.18-ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
  • சேலையூர் அருகே 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் போக்சோவில் கைது
  • காவிரி நீரைத் தடுக்க பாஜக பதற்றத்தை ஏற்படுத்துகிறது: மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம்
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்தி தலா ரூ.1 கோடி வழங்குக என அன்புமணி வலியுறுத்தல்
  • நயினார் நாகேந்திரன் மீது கை வைத்தால் ஒரே நாளில் தவெக ஆட்சி முடிவுக்கு வரும்: துரைமுருகன்
  • டெண்டர் ஊழல் குறித்து ஆடியோ ஆதாரம் உள்ளது: தமிழக அமைச்சர்களை அண்ணாமலை கடுமையாக விமர்சனம்
  • காவிரி முதல் மேகேதாட்டு வரை தினமும் போராட்டமே; இதுவே வாழ்க்கையாகிவிட்டது என சீமான்
  • அமெரிக்கா–தென் கொரியா கூட்டுப் பயிற்சிக்கு முன் வட கொரியா ஏவுகணை சோதனை; மீண்டும் பதற்றம்
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் உயிரிழந்த விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணை தேவை என ஸ்டாலின் வலியுறுத்தல்
  • 80-வது சுதந்திர தின விழாவில் தனித்துவமான தலைப்பாகையுடன் பிரதமர் மோடி; 13-வது உரை
Possibility of heavy rain

செங்கல்பட்டு, விழுப்புரத்தில் ஆக.18-ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

ஆகஸ்ட் 16, 2026
Arrest 56789

சேலையூர் அருகே 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் போக்சோவில் கைது

ஆகஸ்ட் 16, 2026
Manickam Tagore 25

காவிரி நீரைத் தடுக்க பாஜக பதற்றத்தை ஏற்படுத்துகிறது: மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம்

ஆகஸ்ட் 16, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp