ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 16, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

செங்கல்பட்டு, விழுப்புரத்தில் ஆக.18-ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

athibantv by athibantv
ஆகஸ்ட் 16, 2026
in Tamilnadu, Latest-news-tamil
A A
0
Possibility of heavy rain
📢 WhatsApp Channel Join
👁️ 451 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

செங்கல்பட்டு, விழுப்புரத்தில் ஆக.18-ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் வரும் ஆகஸ்டு 18-ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதையின் காரணமாக மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்டு 17-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதர தமிழகப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Related posts

Arrest 56789

சேலையூர் அருகே 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் போக்சோவில் கைது

ஆகஸ்ட் 16, 2026
Manickam Tagore 25

காவிரி நீரைத் தடுக்க பாஜக பதற்றத்தை ஏற்படுத்துகிறது: மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம்

ஆகஸ்ட் 16, 2026

ஆகஸ்டு 18-ம் தேதி செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும், ஆகஸ்டு 19-ம் தேதி நீலகிரி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். இந்த இரு நாட்களிலும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழையும், பிற பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 4 செ.மீ. மழை பெய்துள்ளது. இளையான்குடி, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், கறம்பக்குடி, நீலகிரி மாவட்டம் வூட் பிரையர் எஸ்டேட், செருமுள்ளி மற்றும் பந்தலூர் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • செங்கல்பட்டு, விழுப்புரத்தில் ஆக.18-ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
  • சேலையூர் அருகே 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் போக்சோவில் கைது
  • காவிரி நீரைத் தடுக்க பாஜக பதற்றத்தை ஏற்படுத்துகிறது: மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம்
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்தி தலா ரூ.1 கோடி வழங்குக என அன்புமணி வலியுறுத்தல்
  • நயினார் நாகேந்திரன் மீது கை வைத்தால் ஒரே நாளில் தவெக ஆட்சி முடிவுக்கு வரும்: துரைமுருகன்
  • டெண்டர் ஊழல் குறித்து ஆடியோ ஆதாரம் உள்ளது: தமிழக அமைச்சர்களை அண்ணாமலை கடுமையாக விமர்சனம்
  • காவிரி முதல் மேகேதாட்டு வரை தினமும் போராட்டமே; இதுவே வாழ்க்கையாகிவிட்டது என சீமான்
  • அமெரிக்கா–தென் கொரியா கூட்டுப் பயிற்சிக்கு முன் வட கொரியா ஏவுகணை சோதனை; மீண்டும் பதற்றம்
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் உயிரிழந்த விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணை தேவை என ஸ்டாலின் வலியுறுத்தல்
  • 80-வது சுதந்திர தின விழாவில் தனித்துவமான தலைப்பாகையுடன் பிரதமர் மோடி; 13-வது உரை
Possibility of heavy rain

செங்கல்பட்டு, விழுப்புரத்தில் ஆக.18-ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

ஆகஸ்ட் 16, 2026
Arrest 56789

சேலையூர் அருகே 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் போக்சோவில் கைது

ஆகஸ்ட் 16, 2026
Manickam Tagore 25

காவிரி நீரைத் தடுக்க பாஜக பதற்றத்தை ஏற்படுத்துகிறது: மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம்

ஆகஸ்ட் 16, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp