ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 16, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

கர்நாடகாவில் 3 தமிழர்கள் உயிரிழந்த விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணை தேவை என ஸ்டாலின் வலியுறுத்தல்

athibantv by athibantv
ஆகஸ்ட் 16, 2026
in Political, Latest-news-tamil, Tamilnadu
A A
0
M.K. Stalin
📢 WhatsApp Channel Join
👁️ 1.4K Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

கர்நாடகாவில் 3 தமிழர்கள் உயிரிழந்த விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணை தேவை என ஸ்டாலின் வலியுறுத்தல்

கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில், வெளிப்படைத்தன்மையுடனும் பாரபட்சமின்றியும் நீதி விசாரணை நடத்தி, சம்பவத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவர் அம்மாநில வனத்துறையினரால் அநியாயமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். மனித உயிர்களின் மதிப்பை கருத்தில் கொள்ளாமல் நடத்தப்பட்டதாக கூறப்படும் இந்த சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது என்றும், குற்றத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாக்க கர்நாடக வனத்துறையினர் முயற்சிப்பதாக தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Possibility of heavy rain

செங்கல்பட்டு, விழுப்புரத்தில் ஆக.18-ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

ஆகஸ்ட் 16, 2026
Arrest 56789

சேலையூர் அருகே 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் போக்சோவில் கைது

ஆகஸ்ட் 16, 2026

எனவே, இந்த சம்பவத்தை சாதாரண தாக்குதல் சம்பவமாக பார்க்காமல் கொலை வழக்காக பதிவு செய்து, வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். விசாரணையின் மூலம் சம்பவத்துக்கு காரணமானவர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும், அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட எவருக்கும் துணிவு ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மேகேதாட்டு விவகாரத்தில் அமைதியாக இருந்ததைப் போல இந்த விவகாரத்திலும் மவுனம் காக்காமல், மூன்று தமிழர்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு கர்நாடக அரசிடம் தமிழ்நாடு அரசு தனது கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை பெற்றுத்தருவதுடன், அவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி கிடைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

விசாரணைக்கு கர்நாடக முதல்வர் உத்தரவு

இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சாம்ராஜ்நகர் மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். வனத்துறையினர் நடத்தியதாக கூறப்படும் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்ததாகவும், காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த மூவரின் உடல்களும் மைசூரு கே.ஆர். மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டதாகவும், சம்பவத்தில் வனத்துறையைச் சேர்ந்த ஒருவரும் காயமடைந்துள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களிடம் இருந்து இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

‘மாடு மேய்க்க சென்றவர்கள்’ என போராட்டக்காரர்கள் தகவல்

ஆனால், கொள்ளேகாலில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற விஜய், உயிரிழந்த மூவரும் மாடு மேய்க்க சென்றவர்கள் என தெரிவித்துள்ளார். அவர்கள் இரவு நேரங்களிலும் வனப்பகுதியில் தங்கி மாடுகளை மேய்த்து வந்ததாகவும், மான் வேட்டைக்கு சென்றதாக சந்தேகித்து வனத்துறையினர் அவர்களை நெஞ்சுப் பகுதியில் சுட்டுக் கொன்றதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

உயிரிழந்த மூவருக்கும் நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்த விஜய், சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகளை பணிநீக்கம் செய்வதுடன், அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: dmkPoliticalTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • செங்கல்பட்டு, விழுப்புரத்தில் ஆக.18-ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
  • சேலையூர் அருகே 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் போக்சோவில் கைது
  • காவிரி நீரைத் தடுக்க பாஜக பதற்றத்தை ஏற்படுத்துகிறது: மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம்
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்தி தலா ரூ.1 கோடி வழங்குக என அன்புமணி வலியுறுத்தல்
  • நயினார் நாகேந்திரன் மீது கை வைத்தால் ஒரே நாளில் தவெக ஆட்சி முடிவுக்கு வரும்: துரைமுருகன்
  • டெண்டர் ஊழல் குறித்து ஆடியோ ஆதாரம் உள்ளது: தமிழக அமைச்சர்களை அண்ணாமலை கடுமையாக விமர்சனம்
  • காவிரி முதல் மேகேதாட்டு வரை தினமும் போராட்டமே; இதுவே வாழ்க்கையாகிவிட்டது என சீமான்
  • அமெரிக்கா–தென் கொரியா கூட்டுப் பயிற்சிக்கு முன் வட கொரியா ஏவுகணை சோதனை; மீண்டும் பதற்றம்
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் உயிரிழந்த விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணை தேவை என ஸ்டாலின் வலியுறுத்தல்
  • 80-வது சுதந்திர தின விழாவில் தனித்துவமான தலைப்பாகையுடன் பிரதமர் மோடி; 13-வது உரை
Possibility of heavy rain

செங்கல்பட்டு, விழுப்புரத்தில் ஆக.18-ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

ஆகஸ்ட் 16, 2026
Arrest 56789

சேலையூர் அருகே 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் போக்சோவில் கைது

ஆகஸ்ட் 16, 2026
Manickam Tagore 25

காவிரி நீரைத் தடுக்க பாஜக பதற்றத்தை ஏற்படுத்துகிறது: மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம்

ஆகஸ்ட் 16, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp