திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடியாது என்றால் மாற்று இடத்தை தேர்வு செய்யாதது ஏன்?: நயினார் நாகேந்திரன் கேள்வி!

athibantv by athibantv
ஜூலை 23, 2026
in Political, Latest-news-tamil, Tamilnadu
A A
0
Nainar Nagendran
📢 WhatsApp Channel Join
👁️ 3.6K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடியாது என்றால் மாற்று இடத்தை தேர்வு செய்யாதது ஏன்?: நயினார் நாகேந்திரன் கேள்வி!

சென்னை: பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க முடியாது என்று கூறும் தவெக அரசு, அதற்கான மாற்று இடத்தை இதுவரை தேர்வு செய்யாதது ஏன் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாகத் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழகத்தில் கூடுதல் விமான நிலையம் அமைப்பதில் மாநில அரசு காட்டும் தாமதத்தைக் கடுமையாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தப் பதிவில், “சமீபத்தில் வெளியான நிதி ஆயோக் திட்டக்குழு அறிக்கையில், தமிழகத்தின் இணையற்ற வளர்ச்சிக்கு விமான நிலையங்கள் மற்றும் கழிவுநீர் மேலாண்மை உள்ளிட்ட உள்கட்டமைப்பு திட்டங்களில் மாநில அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை விஜய் தலைமையிலான தமிழக அரசு தீவிரமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

Anbumani

மாநகரப் போக்குவரத்தில் 1,797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிக்க பாமக தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு

ஆகஸ்ட் 17, 2026
Australia – Bangladesh

வங்கதேசத்திடம் ஆஸ்திரேலியா வீழ்ந்ததால் அதிர்ச்சி; டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கேள்வி

ஆகஸ்ட் 17, 2026

மேலும், “தமிழகத்தில் புதிதாக ஒரு புதிய விமான நிலையம் அமைவதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில், ‘விமான ஓடுதளம் அமைக்கப் பரந்தூர் ஏற்ற இடம் இல்லை’ என தவெக-வின் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் சில வாரங்களுக்கு முன்பு கூறியிருந்தார். அதேநேரம், பரந்தூர் விமான நிலையத்திற்கு மாற்று இடம் வேண்டித் தமிழக அரசு சார்பில் இதுவரை எந்தவொரு கோரிக்கையும் மத்திய அரசிடம் வைக்கப்படவில்லை என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்திலேயே தெளிவாகத் தெரிவித்துள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“அப்படியென்றால், அமைச்சர் நிர்மல்குமார் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கக்கூடாது என்று கூறினார்? பரந்தூரில் அமைக்க முடியாது என்றால் இதுவரை மாற்று இடத்தை தேர்வு செய்யாதது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ள நயினார் நாகேந்திரன், நிதி ஆயோக் அறிக்கையின்படி தமிழகத்தின் வான்வழிப் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய விமான நிலையம் அமைக்கத் தவெக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: BjpPoliticalTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • மாநகரப் போக்குவரத்தில் 1,797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிக்க பாமக தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு
  • வங்கதேசத்திடம் ஆஸ்திரேலியா வீழ்ந்ததால் அதிர்ச்சி; டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கேள்வி
  • அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர் பணியிடங்களை இருமடங்காக உயர்த்த கோரிக்கை
  • திருமாவளவனுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து: சமூகநீதிப் பணிகள் சிறக்க வாழ்த்துரை
  • காஞ்சிபுரம் அருகே ஆடித் திருவிழாவில் பயங்கரம்: முன்விரோதத் தகராறில் இருவர் வெட்டிக் கொலை
  • ஹார்முஸ் விவகாரத்தில் சவால்களை விடுத்து சொந்த பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள்: ட்ரம்புக்கு ஈரான் எம்பி அறிவுரை
  • சென்னை லாட்ஜில் போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்த திரிபுரா இளைஞர் கைது
  • கோவை மாணவர் அமுதன் கொலைக்கு முன்விரோதமே காரணம்: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
  • லஞ்சம் கேட்ட போக்குவரத்து எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்: ஊழல் ஒழிப்பு பிரிவின் முதல் நடவடிக்கை
  • அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்: மஞ்சள் உத்தரீயம் கட்டாயம்
Anbumani

மாநகரப் போக்குவரத்தில் 1,797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிக்க பாமக தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு

ஆகஸ்ட் 17, 2026
Australia – Bangladesh

வங்கதேசத்திடம் ஆஸ்திரேலியா வீழ்ந்ததால் அதிர்ச்சி; டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கேள்வி

ஆகஸ்ட் 17, 2026
Two-Day Extension to Apply for MBBS and BDS Courses

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர் பணியிடங்களை இருமடங்காக உயர்த்த கோரிக்கை

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp