திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய வழக்கு: அதிமுக நிர்வாகிகள் 4 பேருக்கு இடைக்கால ஜாமீன்

athibantv by athibantv
செப்டம்பர் 2, 2025
in Political, Tamilnadu
A A
0
📢 WhatsApp Channel Join
👁️ 3.5K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய வழக்கு: அதிமுக நிர்வாகிகள் 4 பேருக்கு இடைக்கால ஜாமீன்

திருச்சி அருகே நடைபெற்ற அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் பிரச்சாரக் கூட்டத்தின்போது, 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்ட வழக்கில், அதிமுக நிர்வாகிகள் 4 பேருக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட துறையூரில் பழனிசாமி பங்கேற்ற பொதுக்கூட்டம் நடந்தபோது, அங்கு சென்ற 108 ஆம்புலன்ஸ் தடுத்து நிறுத்தப்பட்டு, அதன் ஓட்டுநர் தாக்கப்பட்டார். இந்த சம்பவத்துக்காக அதிமுகவைச் சேர்ந்த 10 பேருக்கு எதிராக துறையூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Related posts

Anbumani

மாநகரப் போக்குவரத்தில் 1,797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிக்க பாமக தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு

ஆகஸ்ட் 17, 2026
Two-Day Extension to Apply for MBBS and BDS Courses

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர் பணியிடங்களை இருமடங்காக உயர்த்த கோரிக்கை

ஆகஸ்ட் 17, 2026

இதையடுத்து, துறையூரைச் சேர்ந்த அமைதி பாலு எனப்படும் பாலமுருகவேல், விவேக் (விக்கி), தீனதயாளன், கலிங்கமுடையான்பட்டியைச் சேர்ந்த பொன் காமராஜ் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். மனுவில், “ஆகஸ்ட் 24 ஆம் தேதி மாலை பழனிசாமி துறையூர் பேருந்து நிலையம் அருகே பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது, எங்கள்மீது பொய்யாக ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சம்பவத்துடன் எங்களுக்கு தொடர்பில்லை. எனவே, முன்ஜாமீன் வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டது.

இந்த மனுவை நீதிபதி எஸ்.மதியின் அமர்வு விசாரித்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “பழனிசாமியின் கூட்டங்களுக்கு இடையூறு செய்யவே ஆம்புலன்ஸ்களை அந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்” என வாதிடப்பட்டது. இதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

விசாரணைக்குப் பிறகு, நீதிபதி மனுதாரர்களான நால்வருக்கும் இடைக்கால முன்ஜாமீன் வழங்கி, இந்த வழக்கில் துறையூர் காவல் ஆய்வாளர் பதில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அடுத்தடுத்த விசாரணையை செப்டம்பர் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: AdmkPoliticalTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • மாநகரப் போக்குவரத்தில் 1,797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிக்க பாமக தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு
  • வங்கதேசத்திடம் ஆஸ்திரேலியா வீழ்ந்ததால் அதிர்ச்சி; டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கேள்வி
  • அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர் பணியிடங்களை இருமடங்காக உயர்த்த கோரிக்கை
  • திருமாவளவனுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து: சமூகநீதிப் பணிகள் சிறக்க வாழ்த்துரை
  • காஞ்சிபுரம் அருகே ஆடித் திருவிழாவில் பயங்கரம்: முன்விரோதத் தகராறில் இருவர் வெட்டிக் கொலை
  • ஹார்முஸ் விவகாரத்தில் சவால்களை விடுத்து சொந்த பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள்: ட்ரம்புக்கு ஈரான் எம்பி அறிவுரை
  • சென்னை லாட்ஜில் போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்த திரிபுரா இளைஞர் கைது
  • கோவை மாணவர் அமுதன் கொலைக்கு முன்விரோதமே காரணம்: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
  • லஞ்சம் கேட்ட போக்குவரத்து எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்: ஊழல் ஒழிப்பு பிரிவின் முதல் நடவடிக்கை
  • அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்: மஞ்சள் உத்தரீயம் கட்டாயம்
Anbumani

மாநகரப் போக்குவரத்தில் 1,797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிக்க பாமக தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு

ஆகஸ்ட் 17, 2026
Australia – Bangladesh

வங்கதேசத்திடம் ஆஸ்திரேலியா வீழ்ந்ததால் அதிர்ச்சி; டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கேள்வி

ஆகஸ்ட் 17, 2026
Two-Day Extension to Apply for MBBS and BDS Courses

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர் பணியிடங்களை இருமடங்காக உயர்த்த கோரிக்கை

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp