திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

திருவள்ளூரில் சார்ஜர் வயரில் கசிந்த மின்சாரம் தாக்கி பிளஸ் 1 மாணவன் உயிரிழப்பு

athibantv by athibantv
ஆகஸ்ட் 16, 2026
in Latest-news-tamil, Tamilnadu
A A
0
COVID-19 infection slowly spreading in Andhra Pradesh; death toll in the state rises to 4.
📢 WhatsApp Channel Join
👁️ 1.8K Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

திருவள்ளூரில் சார்ஜர் வயரில் கசிந்த மின்சாரம் தாக்கி பிளஸ் 1 மாணவன் உயிரிழப்பு

திருவள்ளூரில் மடிகணினி சார்ஜர் வயரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக பிளஸ் 1 மாணவன் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி விடுமுறை நாளில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மாணவர், சார்ஜர் வயரை எதிர்பாராதவிதமாக தொட்டபோது இந்த சோக சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

திருவள்ளூர் பெரியகுப்பம் கற்குழாய் தெருவைச் சேர்ந்த செந்தில் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சீனிவாசன் (17), திருவள்ளூர் அருகே மணவாளநகரில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். பள்ளிக்கு விடுமுறை என்பதால் நேற்று மதியம் சீனிவாசன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.

Related posts

Annamalai 28 07 2026

டெண்டர் ஊழல் குறித்து ஆடியோ ஆதாரம் உள்ளது: அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Atal Bihari Vajpayee’s death anniversary ​​President Droupadi Murmu and Prime Minister Modi pay tribute.

வாஜ்பாய் நினைவு தினம்: குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி

ஆகஸ்ட் 17, 2026

அப்போது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த சிறுவன் சீனிவாசனின் வீட்டில் மடிகணினிக்கு சார்ஜர் இணைத்ததாக கூறப்படுகிறது. உறக்கத்தில் இருந்த சீனிவாசன், சார்ஜர் இணைக்கப்பட்டிருந்ததை கவனிக்காமல் அதன் வயரை கையில் எடுத்துள்ளார். அப்போது சார்ஜர் வயரில் ஏற்பட்டிருந்த மின்கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி அவர் மயங்கியதாக தெரிகிறது.

இதையடுத்து, சீனிவாசனை குடும்பத்தினர் மற்றும் அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியிலேயே சீனிவாசன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சார்ஜர் மற்றும் அதன் வயரில் ஏற்பட்ட மின்கசிவு குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • டெண்டர் ஊழல் குறித்து ஆடியோ ஆதாரம் உள்ளது: அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு
  • வாஜ்பாய் நினைவு தினம்: குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி
  • முதல்வர் விஜய் மற்றும் குடும்பம் குறித்து பேச்சு: நயினார் நாகேந்திரனுக்கு கடும் கண்டனம்
  • செங்கல்பட்டு, விழுப்புரத்தில் ஆக.18-ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
  • சேலையூர் அருகே 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் போக்சோவில் கைது
  • காவிரி நீரைத் தடுக்க பாஜக பதற்றத்தை ஏற்படுத்துகிறது: மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம்
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்தி தலா ரூ.1 கோடி வழங்குக என அன்புமணி வலியுறுத்தல்
  • நயினார் நாகேந்திரன் மீது கை வைத்தால் ஒரே நாளில் தவெக ஆட்சி முடிவுக்கு வரும்: துரைமுருகன்
  • டெண்டர் ஊழல் குறித்து ஆடியோ ஆதாரம் உள்ளது: தமிழக அமைச்சர்களை அண்ணாமலை கடுமையாக விமர்சனம்
  • காவிரி முதல் மேகேதாட்டு வரை தினமும் போராட்டமே; இதுவே வாழ்க்கையாகிவிட்டது என சீமான்
Annamalai 28 07 2026

டெண்டர் ஊழல் குறித்து ஆடியோ ஆதாரம் உள்ளது: அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Atal Bihari Vajpayee’s death anniversary ​​President Droupadi Murmu and Prime Minister Modi pay tribute.

வாஜ்பாய் நினைவு தினம்: குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி

ஆகஸ்ட் 17, 2026
Nainar Nagendran’s criticism

முதல்வர் விஜய் மற்றும் குடும்பம் குறித்து பேச்சு: நயினார் நாகேந்திரனுக்கு கடும் கண்டனம்

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp