திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

வேளாண் பட்ஜெட் 2026-27: உழவர் ஏஐ திட்டம் முதல் ‘துளி துளி தண்ணீர்’ வரை புதிய அறிவிப்புகள்

athibantv by athibantv
ஆகஸ்ட் 7, 2026
in Latest-news-tamil, Tamilnadu
A A
0
‘Tamil Nadu Millets Mission’ launched at a cost of ₹7 crore to double the area under millet cultivation.
📢 WhatsApp Channel Join
👁️ 3.5K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

வேளாண் பட்ஜெட் 2026-27: உழவர் ஏஐ திட்டம் முதல் ‘துளி துளி தண்ணீர்’ வரை புதிய அறிவிப்புகள்

2026–27-ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டில், விவசாயத்தை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகளுக்கு மண் வளம், பயிர் சாகுபடி, வானிலை உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் வழங்கும் ‘உழவர் செயற்கை நுண்ணறிவு (AI) திட்டம்’ ரூ.2 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரவழி கற்றல் தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, விதைப்பு முதல் அறுவடை வரை தேவையான அனைத்து தொழில்நுட்ப ஆலோசனைகளும் வழங்கப்படும். வானிலை முன்னறிவிப்பு, மண் நலம், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, பருவநிலைக்கு ஏற்ற பயிர் தேர்வு உள்ளிட்ட சேவைகளுடன், சந்தை நிலவரம், குரல் வழி வேளாண் சேவைகள் மற்றும் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்த தகவல்களையும் விவசாயிகள் தங்களது கைபேசி மூலம் எளிதாக பெறும் வசதி ஏற்படுத்தப்படுகிறது.

Related posts

Chief Minister Vijay’s announcement in the Legislative Assembly

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ரூ.75 ஆயிரம் வரை முழுமையாகத் தள்ளுபடி

ஆகஸ்ட் 17, 2026
Anbumani

மாநகரப் போக்குவரத்தில் 1,797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிக்க பாமக தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு

ஆகஸ்ட் 17, 2026

வறட்சியைத் தாங்கக்கூடிய மற்றும் குறைந்த நீரில் அதிக ஊட்டச்சத்து தரும் சிறுதானியங்களின் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், 29 மாவட்டங்களில் ரூ.7.61 கோடி செலவில் ‘தமிழ்நாடு குறுதானிய இயக்கம்’ செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சாமை, தினை, வரகு, குதிரைவாலி, பனிவரகு உள்ளிட்ட சிறுதானியங்களின் சாகுபடி பரப்பளவை இருமடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நீண்ட இழை பருத்தி மற்றும் ஊடுபயிர் சாகுபடியை மேம்படுத்தும் நோக்கில் ரூ.27.21 கோடி மதிப்பில் ஐந்தாண்டு கால ‘பருத்தி மறுமலர்ச்சி இயக்கம்’ 73,360 ஏக்கர் பரப்பில் செயல்படுத்தப்படும். இதன் மூலம் சுமார் 40 ஆயிரம் பருத்தி விவசாயிகள் பயனடைவார்கள். மேலும், அதிகரித்து வரும் மக்காச்சோள தேவையை பூர்த்தி செய்ய ரூ.36 கோடியில் ‘மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டம்’ 3.47 லட்சம் ஏக்கர் பரப்பில் செயல்படுத்தப்பட்டு, 1.39 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ‘துளி துளி தண்ணீர்’ திட்டத்திற்காக ரூ.758 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படும். இதன் மூலம் 2.23 லட்சம் ஏக்கர் பரப்பில் நுண்ணீர் பாசன வசதி ஏற்படுத்தப்பட்டு, சுமார் 95 ஆயிரம் விவசாயிகள் பயனடைவார்கள் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: BudgetTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ரூ.75 ஆயிரம் வரை முழுமையாகத் தள்ளுபடி
  • மாநகரப் போக்குவரத்தில் 1,797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிக்க பாமக தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு
  • வங்கதேசத்திடம் ஆஸ்திரேலியா வீழ்ந்ததால் அதிர்ச்சி; டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கேள்வி
  • அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர் பணியிடங்களை இருமடங்காக உயர்த்த கோரிக்கை
  • திருமாவளவனுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து: சமூகநீதிப் பணிகள் சிறக்க வாழ்த்துரை
  • காஞ்சிபுரம் அருகே ஆடித் திருவிழாவில் பயங்கரம்: முன்விரோதத் தகராறில் இருவர் வெட்டிக் கொலை
  • ஹார்முஸ் விவகாரத்தில் சவால்களை விடுத்து சொந்த பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள்: ட்ரம்புக்கு ஈரான் எம்பி அறிவுரை
  • சென்னை லாட்ஜில் போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்த திரிபுரா இளைஞர் கைது
  • கோவை மாணவர் அமுதன் கொலைக்கு முன்விரோதமே காரணம்: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
  • லஞ்சம் கேட்ட போக்குவரத்து எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்: ஊழல் ஒழிப்பு பிரிவின் முதல் நடவடிக்கை
Chief Minister Vijay’s announcement in the Legislative Assembly

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ரூ.75 ஆயிரம் வரை முழுமையாகத் தள்ளுபடி

ஆகஸ்ட் 17, 2026
Anbumani

மாநகரப் போக்குவரத்தில் 1,797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிக்க பாமக தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு

ஆகஸ்ட் 17, 2026
Australia – Bangladesh

வங்கதேசத்திடம் ஆஸ்திரேலியா வீழ்ந்ததால் அதிர்ச்சி; டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கேள்வி

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp