“வினாத்தாள் கசிவு விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது” – ராகுல் காந்தி மீது ஜே.பி.நட்டா விமர்சனம்
“வினாத்தாள் கசிவு விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது, அது குறித்து நாடாளுமன்றத்தில் ஆழமான விவாதம் தேவை” என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
வினாத்தாள் கசிவுக்கு வழிவகுத்த காரணிகள் மற்றும் அதற்காக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த அரசு தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
காங்கிரஸ் மற்றும் அதன் ஆதரவு அரசுகளின் ஆட்சியில் நடந்த வினாத்தாள் கசிவு குறித்து ராகுல் காந்தி பேசாதது, மாணவர் நலனை விட அரசியல் ஆதாயம் தேடுவதையே காட்டுகிறது என்றும் விமர்சித்தார்.
மாணவர்கள் நாட்டின் எதிர்காலம் என்பதால், அரசும் எதிர்க்கட்சியும் இணைந்து செயல்பட்டு இதற்கான நிரந்தரத் தீர்வைக் காண்பதே சரியான பொறுப்பாகும் என்றும் ஜே.பி. நட்டா வலியுறுத்தினார்.



