திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

பிரபல தங்க வர்த்தகர் பெயரில் ரூ.75 லட்சம் மோசடி: ராஜஸ்தானில் பதுங்கிய முக்கிய குற்றவாளி கைது

athibantv by athibantv
ஆகஸ்ட் 15, 2026
in India, Crime, Latest-news-tamil
A A
0
Arrest
📢 WhatsApp Channel Join
👁️ 2.6K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

பிரபல தங்க வர்த்தகர் பெயரில் ரூ.75 லட்சம் மோசடி: ராஜஸ்தானில் பதுங்கிய முக்கிய குற்றவாளி கைது

நாட்டின் பிரபல தங்க வர்த்தகரும், ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பின் தலைவருமான பிருத்விராஜ் கோத்தாரியின் பெயரைப் பயன்படுத்தி மோசடி கும்பல் ரூ.75 லட்சத்தை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் இருந்து பிருத்விராஜ் கோத்தாரி தொடர்பான தகவல்களை சேகரித்த மோசடி கும்பல், ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரோஹித்குமார் ஜெயினை கடந்த ஜூலை 8-ம் தேதி தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.

தொலைபேசியில் பேசிய நபர், தான் பிருத்விராஜ் கோத்தாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு ரோஹித்குமாரை நம்ப வைத்துள்ளார். பின்னர் அவசரத் தேவைக்காக ஹைதராபாத்திலிருந்து அகமதாபாத்தின் கலுபூர் பகுதிக்கு பாரம்பரிய பணப் பரிமாற்ற முறையான ‘அங்காடியா’ மூலம் ரூ.75 லட்சத்தை அனுப்புமாறு கேட்டுள்ளார்.

Related posts

Possibility of heavy rain

செங்கல்பட்டு, விழுப்புரத்தில் ஆக.18-ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

ஆகஸ்ட் 16, 2026
Arrest 56789

சேலையூர் அருகே 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் போக்சோவில் கைது

ஆகஸ்ட் 16, 2026

இதனை உண்மை என நம்பிய ரோஹித்குமார், மறுநாளான ஜூலை 9-ம் தேதி ரூ.75 லட்சத்தை அனுப்பியுள்ளார். அகமதாபாத்தில் போலியான பெயரில் வந்த நபர் பணத்தை பெற்றுக்கொண்ட சில நிமிடங்களிலேயே, மோசடியில் தொடர்புடையவர்களின் செல்போன்கள் அனைத்தும் அணைக்கப்பட்டுள்ளன. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரோஹித்குமார் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் அகமதாபாத் கலுபூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, ‘பாரதிய நியாய சன்ஹிதா’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து காவல்துறை துணை ஆணையர் ரூபல் சோலங்கி தலைமையிலான தனிப்படை, வழக்கில் தொடர்புடையவர்களை கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டது.

விசாரணையின் ஒரு பகுதியாக சிசிடிவி காட்சிகள், செல்போன் எண்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பதுங்கியிருந்ததாகக் கூறப்படும் முக்கிய குற்றவாளி மோத்சிங் (48) கைது செய்யப்பட்டார்.

மேலும், பணத்தை நேரடியாக பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் குஜராத்தைச் சேர்ந்த பாரத்கிரி கோஸ்வாமி (32) என்பவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மோத்சிங் மீது ஏற்கெனவே 26-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: CrimeIndia

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • செங்கல்பட்டு, விழுப்புரத்தில் ஆக.18-ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
  • சேலையூர் அருகே 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் போக்சோவில் கைது
  • காவிரி நீரைத் தடுக்க பாஜக பதற்றத்தை ஏற்படுத்துகிறது: மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம்
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்தி தலா ரூ.1 கோடி வழங்குக என அன்புமணி வலியுறுத்தல்
  • நயினார் நாகேந்திரன் மீது கை வைத்தால் ஒரே நாளில் தவெக ஆட்சி முடிவுக்கு வரும்: துரைமுருகன்
  • டெண்டர் ஊழல் குறித்து ஆடியோ ஆதாரம் உள்ளது: தமிழக அமைச்சர்களை அண்ணாமலை கடுமையாக விமர்சனம்
  • காவிரி முதல் மேகேதாட்டு வரை தினமும் போராட்டமே; இதுவே வாழ்க்கையாகிவிட்டது என சீமான்
  • அமெரிக்கா–தென் கொரியா கூட்டுப் பயிற்சிக்கு முன் வட கொரியா ஏவுகணை சோதனை; மீண்டும் பதற்றம்
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் உயிரிழந்த விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணை தேவை என ஸ்டாலின் வலியுறுத்தல்
  • 80-வது சுதந்திர தின விழாவில் தனித்துவமான தலைப்பாகையுடன் பிரதமர் மோடி; 13-வது உரை
Possibility of heavy rain

செங்கல்பட்டு, விழுப்புரத்தில் ஆக.18-ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

ஆகஸ்ட் 16, 2026
Arrest 56789

சேலையூர் அருகே 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் போக்சோவில் கைது

ஆகஸ்ட் 16, 2026
Manickam Tagore 25

காவிரி நீரைத் தடுக்க பாஜக பதற்றத்தை ஏற்படுத்துகிறது: மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம்

ஆகஸ்ட் 16, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp