திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

உறவினருக்கு ஜாமீன் கிடைக்க நீதிபதி படத்துடன் மயானத்தில் மாந்திரீகம்: ஒருவர் கைது

athibantv by athibantv
ஆகஸ்ட் 10, 2026
in India, Crime, Latest-news-tamil
A A
0
Chhattisgarh cremation ground to secure bail for a relative.
📢 WhatsApp Channel Join
👁️ 3K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

உறவினருக்கு ஜாமீன் கிடைக்க நீதிபதி படத்துடன் மயானத்தில் மாந்திரீகம்: ஒருவர் கைது

சத்தீஸ்கரில் கத்திக்குத்து வழக்கில் சிக்கிய உறவினருக்கு ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதற்காக, நீதிபதியின் புகைப்படத்தை வைத்து மயானத்தில் மாந்திரீக பூஜை நடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பான வழக்கில் பிரியான்ஷு போலே மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் ஒருவருக்கு ஏற்கெனவே ஜாமீன் கிடைத்த நிலையில், பிரியான்‌ஷு போலே தொடர்பான மனு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததாக கூறப்படுகிறது.

Related posts

Anbumani

மாநகரப் போக்குவரத்தில் 1,797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிக்க பாமக தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு

ஆகஸ்ட் 17, 2026
Australia – Bangladesh

வங்கதேசத்திடம் ஆஸ்திரேலியா வீழ்ந்ததால் அதிர்ச்சி; டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கேள்வி

ஆகஸ்ட் 17, 2026

இதனிடையே, பிரியான்‌ஷுவின் உறவினரான ரிஷிகேஷ் குமார், இணையத்தில் போலிச் சாமியார் ஒருவரின் வீடியோவை பார்த்ததாக கூறப்படுகிறது. மாந்திரீக பூஜை செய்தால் நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கும் என அவர் நம்பியுள்ளார். இதையடுத்து தன்னுடன் இருந்த மேலும் மூவருடன் இணைந்து மயானத்தில் மாந்திரீக சடங்கு நடத்த அவர் திட்டமிட்டதாக தெரிகிறது.

அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைக்கு இடைப்பட்ட நள்ளிரவில், சீபத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவாரி கிராமத்தில் உள்ள மயானத்துக்கு அவர்கள் சென்றுள்ளனர். அங்கு சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரமேஷ் சின்ஹா, பிரியான்‌ஷு மற்றும் பாதிக்கப்பட்ட நபரின் புகைப்படங்களை வைத்து மாந்திரீக பூஜை நடத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், மீன், எலுமிச்சம்பழம் மற்றும் குங்குமம் உள்ளிட்ட பொருட்களை வைத்து அவர்கள் மாந்திரீக சடங்கில் ஈடுபட்டுள்ளனர். நள்ளிரவு நேரத்தில் மயானத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் சிலர் இருப்பதை கவனித்த கிராம மக்கள், அவர்களை தடுத்து விசாரித்துள்ளனர். அப்போது ரிஷிகேஷ் குமாருடன் வந்த மூவர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், ரிஷிகேஷ் மட்டும் கிராம மக்களிடம் சிக்கிக் கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பிலாஸ்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜனேஷ் சிங் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ரிஷிகேஷ் குமாரை கைது செய்த போலீஸார், மயானத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மாந்திரீகப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய மற்ற மூவரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: CrimeIndia

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • மாநகரப் போக்குவரத்தில் 1,797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிக்க பாமக தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு
  • வங்கதேசத்திடம் ஆஸ்திரேலியா வீழ்ந்ததால் அதிர்ச்சி; டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கேள்வி
  • அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர் பணியிடங்களை இருமடங்காக உயர்த்த கோரிக்கை
  • திருமாவளவனுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து: சமூகநீதிப் பணிகள் சிறக்க வாழ்த்துரை
  • காஞ்சிபுரம் அருகே ஆடித் திருவிழாவில் பயங்கரம்: முன்விரோதத் தகராறில் இருவர் வெட்டிக் கொலை
  • ஹார்முஸ் விவகாரத்தில் சவால்களை விடுத்து சொந்த பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள்: ட்ரம்புக்கு ஈரான் எம்பி அறிவுரை
  • சென்னை லாட்ஜில் போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்த திரிபுரா இளைஞர் கைது
  • கோவை மாணவர் அமுதன் கொலைக்கு முன்விரோதமே காரணம்: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
  • லஞ்சம் கேட்ட போக்குவரத்து எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்: ஊழல் ஒழிப்பு பிரிவின் முதல் நடவடிக்கை
  • அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்: மஞ்சள் உத்தரீயம் கட்டாயம்
Anbumani

மாநகரப் போக்குவரத்தில் 1,797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிக்க பாமக தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு

ஆகஸ்ட் 17, 2026
Australia – Bangladesh

வங்கதேசத்திடம் ஆஸ்திரேலியா வீழ்ந்ததால் அதிர்ச்சி; டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கேள்வி

ஆகஸ்ட் 17, 2026
Two-Day Extension to Apply for MBBS and BDS Courses

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர் பணியிடங்களை இருமடங்காக உயர்த்த கோரிக்கை

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp