தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நமது அஇஅதிமுக வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு. SP வேலுமணி அவர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன் என தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை.
கோவை மாவட்டத்தின் வளர்ச்சியை முடக்கி, கடந்த 5 ஆண்டுகளாக கோவை மக்களை திமுக வஞ்சித்து வருகிறது. கொரோனா தடுப்பூசி வழங்குவதில் தொடங்கி தொழில்துறை வளர்ச்சி வரை ஒவ்வொரு முறையும் திமுக அரசு கோவை மாநகரை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தியது. கோவை மாநகரத்திற்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்து, இப்பகுதியில் தொழிற்துறையை மீட்டெடுத்து நமது கோவையை வளமான கோவையாக உருவாக்கிட வேண்டும் என்ற உறுதியேற்று வரும் 23 ஆம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்க கோவை மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
அடுத்த 2 நாட்களும், நமக்கு தெரிந்த உள்ளூர் வாக்காளர்கள் அனைவரையும் தனிப்பட்ட முறையில் அழைத்து அனைவரின் ஆதரவையும் ஒருங்கிணைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்காக நாம் அனைவரும் அயராது செயலாற்ற வேண்டும். தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வெற்றி வேட்பாளர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை கோவை மக்கள் வழங்குவதை நாமும் இணைந்து உறுதி செய்திட வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையட்டும்! கோவை மாநகரம் வளரட்டும்!
தமிழக மக்கள் இதுவரை காணாத ஒரு காட்டாட்சியை, கடந்த 5 ஆண்டுகளாக, நடத்தி முடித்திருக்கும் தீயசக்தி திமுகவை விரட்டியடித்து, தமிழக மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதையே குறிக்கோளாக கொண்டு களப்பணியாற்றி வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் நமது அஇஅதிமுக வெற்றி வேட்பாளர் திரு.அம்மன் K.அர்ச்சுனன் அவர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.
அலிபாபாவும் 40 திருடர்களையும் போல, கரூரில் இருந்து 10 ரூபாய் பாலாஜியும், 18 திருடர்களும் கொண்ட ஒரு கும்பல் கோவை தெற்கு தொகுதிக்கு வந்திருக்கிறது. ஜனநாயகத்தை, பண நாயகத்தால் வெல்லலாம் என்ற திரு.செந்தில் பாலாஜியின் அற்ப எண்ணத்தை தவிடுபொடியாக்க வேண்டும் என்ற உறுதியோடு கோவை மக்கள் வாக்களிக்க காத்திருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளாக, ஒரு கேன்சர் கிருமியை போல தமிழகத்தை அரித்து கொள்ளையடித்து கொண்டிருக்கும் திமுகவை துரத்தியடிக்கவேண்டிய கடமை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் உள்ளது என்பதை உணர வேண்டிய நேரம் இது.
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்திட, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கோவை தெற்கு தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் திரு.அம்மன் K.அர்ச்சுனன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து கோவை மக்கள் வரலாற்று வெற்றியை பரிசளிக்கப்போவது உறுதி. தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லட்டும்! வளமான கோவை மலரட்டும் என தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை.
அலிபாபா 40 திருடர்கள் போல, கரூரில் 10 ரூபாய் பாலாஜி, 18 திருடர்கள் கொண்ட ஒரு கும்பல்… அண்ணாமலை




