பில் கேட்ஸ் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் – மெலிண்டா கேட்ஸ் அதிர்ச்சி

Date:

பில் கேட்ஸ் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் – மெலிண்டா கேட்ஸ் அதிர்ச்சி

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மீது முன்வைக்கப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு, தனக்கு ஆழ்ந்த வேதனையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக அவரது முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளியாகிய சுமார் 35 லட்சம் பக்கங்கள் கொண்ட எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில், பில் கேட்ஸ் ரஷ்ய பெண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், அதன் காரணமாக பாலியல் நோயால் பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதற்காக அவர் தனது உதவியாளர் மூலமாக ரகசியமாக ஆன்டிபயாடிக் மருந்துகளை பெற்றதாகவும் அந்த ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் பில் கேட்ஸ் தரப்பு முற்றிலும் மறுத்துள்ளது.

இந்த சூழலில், ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மெலிண்டா கேட்ஸ், எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியாகிய தகவல்கள் தன்னை நம்ப முடியாத அளவுக்கு சோகத்தில் ஆழ்த்தியதாக தெரிவித்தார்.

மேலும், அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பாலியல் அத்துமீறல்கள் மற்றும் நடத்தைகள் குறித்து பில் கேட்ஸ் உள்ளிட்ட தொடர்புடையவர்களே விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இவ்விவகாரத்தில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அவர் தெளிவாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மதுரை விமான நிலைய நிலம் கையகப்படுத்தல் விவகாரம் – அமைச்சர் மூர்த்தி மீது சின்ன உடைப்பு கிராம மக்களின் எதிர்ப்பு தீவிரம்

மதுரை விமான நிலைய நிலம் கையகப்படுத்தல் விவகாரம் – அமைச்சர் மூர்த்தி...

அமைச்சர் மூர்த்தி கருத்து விவகாரம் – சின்ன உடைப்பு கிராம மக்களில் அதிருப்தி; மதுரை ஆட்சியர் அலுவலகம் போராட்டக்களம்

அமைச்சர் மூர்த்தி கருத்து விவகாரம் – சின்ன உடைப்பு கிராம மக்களில்...

அமெரிக்கா தேவைக்கு பயன்படுத்தி புறக்கணிக்கிறது – பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு

அமெரிக்கா தேவைக்கு பயன்படுத்தி புறக்கணிக்கிறது – பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு அமெரிக்கா...

மூடா வழக்கில் புதிய சர்ச்சை – லோக் ஆயுக்தா அதிகாரிகளுக்கு கோடிகள் லஞ்சம் வழங்கியதாக குற்றச்சாட்டு

மூடா வழக்கில் புதிய சர்ச்சை – லோக் ஆயுக்தா அதிகாரிகளுக்கு கோடிகள்...