சாவர்க்கர் மன்னிப்பு கேட்டாரா…?
மன்னிப்பு வேண்டும் என அவர் எழுதிய கடிதங்களில் எங்கும் குறிப்பிட வில்லை… விண்ணப்பக் கடிதங்களில் வீர சாவர்க்கர் சட்டபூர்வமான தண்டனை குறைப்பையே (clemency) கோருகிறாரே தவிர, ஒரு வார்த்தை கூட மன்னிப்பு கோரியோ, தனது முந்தைய வன்முறைகளுக்கு வருத்தம் தெரிவிக்கவோ இல்லை.
சந்தேகம் இருந்தால், அவரது கடிதங்கள் இணையங்களில் உண்டு சரிபார்ககலாம்.. மன்னிப்பு கேட்கிறேன் என்றோ, இதுவரை செய்த செயல்களுக்கு வருத்தமோ தெரிவிக்காத விண்ணப்பம் எப்படி மன்னிப்பு கோருதல் ஆகும் ?
தன்னை விடுதலை செய்யக் கோரி அவர் பல விண்ணப்பங்களை வைத்தார். அவற்றையும் படித்துப் பாருங்கள். அவற்றில் ஏதேனும் ஒன்றிலாவது மன்னிப்பு என்கிற வார்த்தையோ, தான் செய்த செயல்களுக்கு வருந்தும் வார்த்தைகளோ இருக்கின்றனவா என. இல்லை.
இருப்பினும், அவரது இந்த விண்ணப்பங்களை (petition) மன்னிப்புக் கடிதங்கள் (apology, mercy) எனக் கூச்சமே இன்றி பொய் சொல்பவர்களை எப்படி அழைப்பது ?
இந்த விண்ணப்பங்களை ஆங்கிலேயர் ஏற்றுக்கொள்ளாமல் மறுதலித்தது ஏன் ? அதுவும் தொடர்ந்து 10 வருடங்களாக.
ஏனென்றால், அவர்களுக்குத் தெரியும் வெளியே விட்டால் என்ன ஆகும் என.
அந்தமான் செல்லுலர் ஜெயிலுக்குப் போகிறவர்கள் முதல் ஆறு மாதங்கள் மட்டுமே ஜெயிலில் இருப்பார்கள். பின்பு, அரசியல் கைதிகளான அவர்கள் தங்களது குடும்பத்தோடு அந்தமான் தீவில் வசிக்கலாம் என்றும் சில வசதிகள் இருந்தன. ஆனால், இந்த வசதிகள் வீர சாவர்க்கருக்குத் தரப்படவே இல்லை. 11 வருடங்கள் கடுங்காவல் சிறைத் துயர்களை அவர் அனுபவித்தார்…
அவர் இங்கனம் விடுதலை கோரி விண்ணப்பம் அனுப்புவதைத் தான் மட்டுமல்ல, மற்ற சக சிறைக்கைதிகளும் செய்ய வேண்டும் என உபதேசித்தார்…
அப்படி விண்ணப்பம் தந்து வெளியே வந்து அமைதியாக அரசியல் செய்தாரா அல்லது நேரு மாமா போல வேலை செய்தாரா என வரலாறு சொல்லும்…
1913-ம் ஆண்டு அந்தமான் சிறைகளுக்குச் சென்ற சர். ரெஜினால்ட் க்ராடோக், சாவர்கர் உட்பட பல ஆயுள்தண்டனைக் கைதிகளைச் சந்தித்துப் பேட்டியெடுத்தார். மனுக்களைப் பெற்றவரும் அவரே! அது குறித்து பிரிட்டிஷ் அரசுக்கு க்ரோடோக் எழுதிய குறிப்பில் மிகத்தெளிவாக, ‘சாவர்கரின் மனுவில் வருத்தமோ, பச்சாதாபமோ துளியும் இல்லை,’ என்று குறிப்பிட்டிருந்தார்.
தண்டனை ரத்துக்காக மனு எழுதுவதற்கு பிரிட்டிஷார் என்னென்ன விதிமுறைகளை அப்போது நடைமுறைப்படுத்தியிருந்தார்களோ, அவற்றையே ஒரு பாரிஸ்டரான சாவர்கர் பயன்படுத்தினார். அதை மன்னிப்பு என்று கொச்சைப்படுத்துகின்ற விளக்கெண்ணை முண்டங்களுக்கு வரலாறும் தெரியாது; சட்டமும் தெரியாது.
மன்னிப்பு கேட்ட பிறகும் பேருக்கு செய்யும் கைதுக்கே முன் ஜாமீன் வாங்க நீதிமன்றம் நீதிமன்றமாக ஓடும் சில்லறைகள், 28 ஆண்டுகள் இருட்டு சிறையில் துன்பப்பட்டவரை பற்றி வாய் கூசாமல் பேசுகின்றனர் ….






