“ஈரான் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றால் இஸ்ரேல் அழிந்திருக்கும்” – ட்ரம்ப் தகவல்
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய ராணுவத் தாக்குதல்களே இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த லெபனான் அதிபர் ஜோசப் அவ்னுடனான சந்திப்பின் போது பேசிய ட்ரம்ப், ஈரான் மீது தாக்குதல் நடத்தாதிருந்தால் இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது என்றார்.
அமெரிக்காவின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ், தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் படைகள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளையில், இஸ்ரேல் முழுமையாக வெளியேறுவதை உறுதி செய்ய அமெரிக்கா அழுத்தம் தர வேண்டும் என்றும், லெபனான் ராணுவத்திற்குத் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்றும் லெபனான் அதிபர் கேட்டுக்கொண்டார்.



