விவாகரத்து கோரிய மனுவை வாபஸ் பெற்றார் விஜய் மனைவி சங்கீதா – செங்கல்பட்டு நீதிமன்றம் வழக்கை முடித்து வைப்பு
முதலமைச்சர் விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவரது மனைவி சங்கீதா வாபஸ் பெற்றுள்ளார். செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த மனுவை திரும்பப் பெறுவதாக சங்கீதா தெரிவித்துள்ளார்.
விவாகரத்து வழக்கு தொடர்பாக செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் சங்கீதா ஆஜரானார். அவரிடம் நீதிபதி சுஜாதா சுமார் 15 நிமிடங்கள் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையின்போது, விவாகரத்து கோரும் மனுவை தொடர விருப்பம் இல்லை எனவும், அதனை வாபஸ் பெற விரும்புவதாகவும் சங்கீதா நீதிபதியிடம் தெரிவித்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை முடித்து வைப்பதாக அறிவித்தது. இதன் மூலம் முதலமைச்சர் விஜயிடம் விவாகரத்து கோரிய வழக்கு நீதிமன்றத்தில் நிறைவடைந்துள்ளது.



