திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

TNPL 2026: திருச்சி அணியை வீழ்த்தி 2 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பேந்தர்ஸ் வெற்றி

athibantv by athibantv
ஆகஸ்ட் 6, 2026
in Tamilnadu, Latest-news-tamil, Sports
A A
0
Madurai Panthers Team Wins TNPL 2026
📢 WhatsApp Channel Join
👁️ 3.4K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

TNPL 2026: திருச்சி அணியை வீழ்த்தி 2 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பேந்தர்ஸ் வெற்றி

டிஎன்பிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் திண்டுக்கலில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் மற்றும் மதுரை பேந்தர்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மதுரை பேந்தர்ஸ் அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் சுரேஷ் குமார் சிறப்பாக விளையாடி 43 ரன்கள் சேர்த்தார். சஞ்ஜய் யாதவ் 37 ரன்களும், ராஜ் குமார் 35 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

Related posts

Vice President C.P. Radhakrishnan

தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதையும் அவமதிப்பாக கருதக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்

ஆகஸ்ட் 17, 2026
Manickam Tagore

தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் பாதிப்பு: மோடி அரசை மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடல்

ஆகஸ்ட் 17, 2026

மதுரை பேந்தர்ஸ் அணியின் பந்துவீச்சில் ராஜலிங்கம் சிறப்பாக செயல்பட்டு 3 விக்கெட்களை கைப்பற்றினார். இதையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்கியது.

தொடக்கத்தில் சவாலான நிலை இருந்தாலும், மதுரை பேந்தர்ஸ் வீரர்கள் பொறுப்புடன் விளையாடி இலக்கை எட்டினர். அந்த அணி 19.4 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 174 ரன்கள் எடுத்து வெற்றியை பதிவு செய்தது.

மதுரை அணிக்காக கிரண் கார்த்திக்கேயன் 38 ரன்களும், சதுர்வேத் 27 ரன்களும், பாலசந்தர் அனிருத் 23 ரன்களும் சேர்த்தனர். இறுதிக்கட்டத்தில் சரவணன் அதிரடியாக விளையாடி 13 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் குவித்தார்.

அதேபோல், குர்ஜப்னீத் சிங் 9 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மதுரை பேந்தர்ஸ் அணிக்கு 2 புள்ளிகள் வழங்கப்பட்டன. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குர்ஜப்னீத் சிங் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: CricketSportsTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதையும் அவமதிப்பாக கருதக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்
  • தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் பாதிப்பு: மோடி அரசை மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடல்
  • சொத்துக் குவிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
  • சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் விவகாரத்தில் அமைச்சர் பதில் அளிக்கவில்லை என உதயநிதி குற்றச்சாட்டு
  • நெய்வேலியில் இரு தரப்பினர் மோதலில் இளைஞர் வெட்டிக்கொலை; 15 நாட்களில் 4 கொலைகளால் அச்சம்
  • ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 8,000 கனஅடியாக அதிகரிப்பு; மேட்டூர் அணை நீர்மட்டமும் உயர்வு
  • கல்லூரி மாணவர் அமுதன் கொலை குறித்து விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
  • கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ரூ.75 ஆயிரம் வரை முழுமையாகத் தள்ளுபடி
  • மாநகரப் போக்குவரத்தில் 1,797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிக்க பாமக தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு
  • வங்கதேசத்திடம் ஆஸ்திரேலியா வீழ்ந்ததால் அதிர்ச்சி; டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கேள்வி
Vice President C.P. Radhakrishnan

தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதையும் அவமதிப்பாக கருதக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்

ஆகஸ்ட் 17, 2026
Manickam Tagore

தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் பாதிப்பு: மோடி அரசை மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடல்

ஆகஸ்ட் 17, 2026
Rahul Gandhi

சொத்துக் குவிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp