திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

தவெகவில் முன்னாள் அதிமுக எம்எல்ஏக்களுக்கு முக்கிய பொறுப்புகள்? 6 பேருக்கு மாநில அளவிலான பதவிகள் வழங்கப்படலாம் என தகவல்

athibantv by athibantv
ஆகஸ்ட் 1, 2026
in Tamilnadu, Latest-news-tamil, Political
A A
0
Vijayabaskar TVK
📢 WhatsApp Channel Join
👁️ 2.2K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

தவெகவில் முன்னாள் அதிமுக எம்எல்ஏக்களுக்கு முக்கிய பொறுப்புகள்? 6 பேருக்கு மாநில அளவிலான பதவிகள் வழங்கப்படலாம் என தகவல்

அதிமுகவில் இருந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தமிழ்நாடு வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த 6 முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு மாநில அளவிலான முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று நடைபெறவுள்ள கட்சி இணைப்பு நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

Related posts

Vice President C.P. Radhakrishnan

தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதையும் அவமதிப்பாக கருதக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்

ஆகஸ்ட் 17, 2026
Manickam Tagore

தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் பாதிப்பு: மோடி அரசை மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடல்

ஆகஸ்ட் 17, 2026

பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைய உள்ள நிலையில், முன்னாள் எம்எல்ஏக்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா உள்ளிட்டோருக்கு மாநில அளவிலான பொறுப்புகள் வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் அனைவரும் அதிமுகவில் இருந்து விலகி, அமைச்சர் ஆதவ் அர்ஜூனா முன்னிலையில் தவெகவில் இணைந்திருந்தனர். பின்னர் முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் சி. விஜயபாஸ்கரும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து கட்சியில் இணைந்தனர்.

இதற்கிடையில், கட்சியில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் இதுவரை தங்களுக்கு எந்தக் கட்சிப் பொறுப்பும் வழங்கப்படாததால் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. சிலர் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை எதிர்பார்த்து வந்த நிலையில், இதுகுறித்த தகவல்கள் கட்சித் தலைமையின் கவனத்திற்கும் சென்றதாக கூறப்படுகிறது.

அதையடுத்து, கட்சியின் தொடக்க கால நிர்வாகிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், அனைவருக்கும் உரிய பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் முதல்வரும் தவெக தலைவருமான விஜய் உறுதியளித்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் தொடர்ச்சியாக முதற்கட்டமாக முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேருக்கு மாநில அளவிலான பதவிகள் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

மேலும், முன்னாள் அமைச்சர்களான கடம்பூர் ராஜூ, எம்.சி. சம்பத், உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன், என்.ஆர். சிவபதி, வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் எம்.எஸ்.எம். ஆனந்தன் ஆகியோருக்கும் அடுத்த கட்டத்தில் கட்சிப் பொறுப்புகள் வழங்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இதுகுறித்து தவெக சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த தகவல்கள் கட்சி வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையிலானவை.

📢 WhatsApp Channel Join

Related

Tags: PoliticalTamilnaduTVK-NEWS

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதையும் அவமதிப்பாக கருதக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்
  • தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் பாதிப்பு: மோடி அரசை மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடல்
  • சொத்துக் குவிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
  • சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் விவகாரத்தில் அமைச்சர் பதில் அளிக்கவில்லை என உதயநிதி குற்றச்சாட்டு
  • நெய்வேலியில் இரு தரப்பினர் மோதலில் இளைஞர் வெட்டிக்கொலை; 15 நாட்களில் 4 கொலைகளால் அச்சம்
  • ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 8,000 கனஅடியாக அதிகரிப்பு; மேட்டூர் அணை நீர்மட்டமும் உயர்வு
  • கல்லூரி மாணவர் அமுதன் கொலை குறித்து விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
  • கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ரூ.75 ஆயிரம் வரை முழுமையாகத் தள்ளுபடி
  • மாநகரப் போக்குவரத்தில் 1,797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிக்க பாமக தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு
  • வங்கதேசத்திடம் ஆஸ்திரேலியா வீழ்ந்ததால் அதிர்ச்சி; டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கேள்வி
Vice President C.P. Radhakrishnan

தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதையும் அவமதிப்பாக கருதக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்

ஆகஸ்ட் 17, 2026
Manickam Tagore

தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் பாதிப்பு: மோடி அரசை மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடல்

ஆகஸ்ட் 17, 2026
Rahul Gandhi

சொத்துக் குவிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp