ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை: ஹர்மன்பிரீத் சிங் தலைமையில் 20 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறவுள்ள எஃப்ஐஎச் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை தொடருக்கான 20 வீரர்கள் அடங்கிய இந்திய அணியை ஹர்மன்பிரீத் சிங் வழிநடத்துகிறார்.
வரும் ஆகஸ்ட் 14 முதல் 30-ம் தேதி வரை நடைபெறவுள்ள இத்தொடரில் 16 அணிகள் 4 பிரிவுகளாகப் பங்கேற்றுப் போட்டியிடுகின்றன. இதில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
அணியில் மோஹித், அமித் ரோஹிதாஸ், ஹர்திக் சிங், மன்பிரீத் சிங், அபிஷேக் உள்ளிட்ட அனுபவமும் இளமையும் வாய்ந்த முக்கிய வீரர்கள் கோல்கீப்பர், தடுப்பாட்டம் மற்றும் முன்களப் பிரிவுகளில் இடம்பெற்றுள்ளனர்.
1975-க்குப் பின் வரலாறு படைக்க வாய்ப்புள்ளதாகக் கூறிய பயிற்சியாளர் கிரெய்க் ஃபுல்டன், வீரர்கள் திறமையால் இடத்தை வென்றுள்ளதால் தொடரை ஆர்வத்துடன் எதிர்நோக்குவதாகத் தெரிவித்துள்ளார்.



