திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

முதல்வர் விஜய் தலைமையில் நடந்த எம்.பி.க்கள் கூட்டத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக தீர்மானம்

athibantv by athibantv
ஆகஸ்ட் 8, 2026
in Political, Latest-news-tamil, Tamilnadu
A A
0
What resolution was passed at the meeting of MPs held under the leadership of Chief Minister Vijay
📢 WhatsApp Channel Join
👁️ 2.1K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

முதல்வர் விஜய் தலைமையில் நடந்த எம்.பி.க்கள் கூட்டத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக தீர்மானம்

தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக விவாதிப்பதற்காக தவெக அரசு ஏற்பாடு செய்த தமிழக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் தொகுதி மறுவரையறை தொடர்பாக விவாதிக்க முதல்வர் விஜய் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

Related posts

Vice President C.P. Radhakrishnan

தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதையும் அவமதிப்பாக கருதக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்

ஆகஸ்ட் 17, 2026
Manickam Tagore

தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் பாதிப்பு: மோடி அரசை மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடல்

ஆகஸ்ட் 17, 2026

இந்தக் கூட்டத்தை திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. மேலும், பாமக, மநீம, தேமுதிகவைச் சேர்ந்த எம்.பி.க்களும் பங்கேற்காததால் மொத்தம் 37 எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அதேநேரத்தில், தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸின் 11 எம்.பி.க்கள், விசிக, சிபிஎம், சிபிஐ கட்சிகளின் தலா 2 எம்.பி.க்கள், ஐயுஎம்எல் மற்றும் மதிமுகவின் தலா ஒரு எம்.பி. என மொத்தம் 19 பேர் கூட்டத்தில் பங்கேற்றனர். காங்கிரஸ் எம்.பி. சுதா மட்டும் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் தொகுதி மறுவரையறை தொடர்பாக தங்களது கருத்துகளை தெரிவித்தனர். தவெக அரசு சார்பில் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், நிர்மல்குமார் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், தமிழகத்தின் உரிமைகளை பாதிக்கும் வகையில் தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற முயற்சித்து வருவதாக தெரிவித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக அனைத்து தரப்பினரும் ஒருமித்த கருத்துடன் தீர்மானம் நிறைவேற்றியதாகவும் அவர் கூறினார்.

இதுகுறித்து விசிக எம்.பி. திருமாவளவன் கூறுகையில், முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தங்கள் கட்சி சார்பில் பங்கேற்றதாகவும், மூத்த தலைவர் ப.சிதம்பரமும் கலந்து கொண்டதாகவும் தெரிவித்தார். அனைத்து கட்சிகளின் சார்பிலும் எம்.பி.க்கள் தங்களது கருத்துகளை தெரிவித்ததாகவும், இறுதியாக முதல்வர் விஜய் உரையாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கூட்டத்தின் நிறைவில், தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும், மக்களவையில் தற்போதுள்ள 543 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையும், தமிழகத்துக்கான 39 மக்களவைத் தொகுதிகள் என்ற எண்ணிக்கையும் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக திருமாவளவன் தெரிவித்தார்.

மேலும், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம் என்றும், இதனால் தொகுதி மறுவரையறை செய்யக்கூடாது என்ற அடிப்படையில் அனைத்து எம்.பி.க்களும் தங்களது கருத்துகளை முன்வைத்ததாகவும் அவர் கூறினார்.

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரமும் தமிழகத்தின் உரிமைகள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் ஒருமித்த கருத்து நிலவுவதாக தெரிவித்தார். மக்களவையில் தற்போதுள்ள 543 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையும், தமிழகத்துக்கான 39 தொகுதிகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஏற்கெனவே 543 உறுப்பினர்கள் பேசுவதற்கே போதிய நேரம் இல்லாத நிலையில், உறுப்பினர்களின் எண்ணிக்கையை 850 ஆக அதிகரித்தால் ஒவ்வொரு எம்.பி.க்கும் பேசுவதற்கான வாய்ப்பு மேலும் குறையும் என்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: PoliticalTamilnaduTVK-NEWS

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதையும் அவமதிப்பாக கருதக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்
  • தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் பாதிப்பு: மோடி அரசை மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடல்
  • சொத்துக் குவிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
  • சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் விவகாரத்தில் அமைச்சர் பதில் அளிக்கவில்லை என உதயநிதி குற்றச்சாட்டு
  • நெய்வேலியில் இரு தரப்பினர் மோதலில் இளைஞர் வெட்டிக்கொலை; 15 நாட்களில் 4 கொலைகளால் அச்சம்
  • ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 8,000 கனஅடியாக அதிகரிப்பு; மேட்டூர் அணை நீர்மட்டமும் உயர்வு
  • கல்லூரி மாணவர் அமுதன் கொலை குறித்து விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
  • கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ரூ.75 ஆயிரம் வரை முழுமையாகத் தள்ளுபடி
  • மாநகரப் போக்குவரத்தில் 1,797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிக்க பாமக தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு
  • வங்கதேசத்திடம் ஆஸ்திரேலியா வீழ்ந்ததால் அதிர்ச்சி; டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கேள்வி
Vice President C.P. Radhakrishnan

தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதையும் அவமதிப்பாக கருதக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்

ஆகஸ்ட் 17, 2026
Manickam Tagore

தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் பாதிப்பு: மோடி அரசை மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடல்

ஆகஸ்ட் 17, 2026
Rahul Gandhi

சொத்துக் குவிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp