திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

மேகேதாட்டு அணைக்கு எதிராக ராகுல் குரல் கொடுத்தால் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவோம் – அன்புமணி

athibantv by athibantv
ஜூலை 31, 2026
in Political, Latest-news-tamil, Tamilnadu
A A
0
Anbumani pmk
📢 WhatsApp Channel Join
👁️ 3.2K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

மேகேதாட்டு அணைக்கு எதிராக ராகுல் குரல் கொடுத்தால் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவோம் – அன்புமணி

மேகேதாட்டு அணை கட்டக்கூடாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்தால், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற தயாராக உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

Related posts

Vice President C.P. Radhakrishnan

தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதையும் அவமதிப்பாக கருதக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்

ஆகஸ்ட் 17, 2026
Manickam Tagore

தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் பாதிப்பு: மோடி அரசை மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடல்

ஆகஸ்ட் 17, 2026

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழக முதல்வர் கர்நாடகா சென்று அம்மாநில முதல்வரை சந்தித்து, மேகேதாட்டு அணை கட்டும் இடத்தை பார்வையிடுவது தமிழகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். கர்நாடகா அணையை கட்டவே கூடாது என்று நாம் வலியுறுத்தி வரும் நிலையில், அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த பயனும் இல்லை. இது தவறான அணுகுமுறை” என்று குற்றம்சாட்டினார்.

மேலும் பேசிய அவர், “இது தொடர்பான பேச்சுவார்த்தை மத்திய அரசிடமும், பிரதமர் மோடியிடமும் தான் நடத்தப்பட வேண்டும். கர்நாடக விவகாரத்தை அம்மாநில அரசு வேறு விதமாக திசை திருப்புகிறது. இதில் மத்தியில் ஆளும் பாஜகவும், கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸும் கூட்டு சதி செய்கின்றன. இந்த சூழ்ச்சியில் தமிழக முதல்வர் சிக்கிவிடக் கூடாது. தமிழகத்தின் அனுமதியின்றியே அணை கட்டலாம் என 2018-ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் கூறியது முற்றிலும் தவறு” என்றார்.

தொடர்ந்து பேசிய அன்புமணி, “அந்தமான் நிக்கோபார் தீவுகளில் காடுகளை அழித்து கிரேட் நிக்கோபார் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவிக்கிறார். அதேபோல் 12,500 ஏக்கர் வனப்பகுதியை அழித்து கட்டப்படவுள்ள மேகேதாட்டு அணைக்கு எதிராக பேச ராகுல் காந்திக்கு துணிச்சல் உண்டா? தமிழக காங்கிரஸ் தலைவருக்காவது அந்த தைரியம் இருக்கிறதா? கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்டக்கூடாது என ராகுல் காந்தி ஒரு வார்த்தை சொன்னால் கூட, நாங்கள் உடனடியாக என்டிஏ கூட்டணியில் இருந்து விலக தயார்” என்று சவால் விடுத்தார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: PMK-NEWSPoliticalTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதையும் அவமதிப்பாக கருதக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்
  • தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் பாதிப்பு: மோடி அரசை மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடல்
  • சொத்துக் குவிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
  • சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் விவகாரத்தில் அமைச்சர் பதில் அளிக்கவில்லை என உதயநிதி குற்றச்சாட்டு
  • நெய்வேலியில் இரு தரப்பினர் மோதலில் இளைஞர் வெட்டிக்கொலை; 15 நாட்களில் 4 கொலைகளால் அச்சம்
  • ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 8,000 கனஅடியாக அதிகரிப்பு; மேட்டூர் அணை நீர்மட்டமும் உயர்வு
  • கல்லூரி மாணவர் அமுதன் கொலை குறித்து விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
  • கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ரூ.75 ஆயிரம் வரை முழுமையாகத் தள்ளுபடி
  • மாநகரப் போக்குவரத்தில் 1,797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிக்க பாமக தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு
  • வங்கதேசத்திடம் ஆஸ்திரேலியா வீழ்ந்ததால் அதிர்ச்சி; டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கேள்வி
Vice President C.P. Radhakrishnan

தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதையும் அவமதிப்பாக கருதக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்

ஆகஸ்ட் 17, 2026
Manickam Tagore

தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் பாதிப்பு: மோடி அரசை மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடல்

ஆகஸ்ட் 17, 2026
Rahul Gandhi

சொத்துக் குவிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp