திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

கார்கில் வெற்றி தின நிகழ்ச்சியில் கூட்டணி விரிசல் வெளிப்பாடு: பாஜகவினர் தனியாக மரியாதை செலுத்தினர்

athibantv by athibantv
ஜூலை 26, 2026
in Latest-news-tamil, India, Political
A A
0
Rift surfaces at Kargil Vijay Diwas event – ​​BJP members pay tribute separately.
📢 WhatsApp Channel Join
👁️ 1.9K Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

கார்கில் வெற்றி தின நிகழ்ச்சியில் கூட்டணி விரிசல் வெளிப்பாடு: பாஜகவினர் தனியாக மரியாதை செலுத்தினர்

கார்கில் வெற்றி தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கூட்டணி கட்சிகளுக்கிடையேயான கருத்து வேறுபாடு வெளிப்பட்டதாக கூறப்படுகிறது. முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பாஜகவினர் கலந்து கொள்ளாமல், பின்னர் தனியாக வந்து போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தினர்.

1999-ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற கார்கில் போரில் இந்திய ராணுவம் பெற்ற வெற்றியை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் தேதி கார்கில் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், நாட்டின் பாதுகாப்புக்காக பணியாற்றும் ராணுவ வீரர்களை கவுரவிக்கவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

Related posts

Vice President C.P. Radhakrishnan

தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதையும் அவமதிப்பாக கருதக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்

ஆகஸ்ட் 17, 2026
Manickam Tagore

தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் பாதிப்பு: மோடி அரசை மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடல்

ஆகஸ்ட் 17, 2026

இதையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர் நினைவுச் சின்னத்தில் புதுச்சேரி அரசு சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் அன்பழகன், அமைச்சர்கள் ராஜவேலு, சிவக்கொழுந்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

மேலும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஆனால், புதுச்சேரியில் கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றுள்ள பாஜக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் இந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக பாஜக தரப்பு அரசு நிகழ்ச்சிகளை புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த முறை வகித்த அமைச்சர் பதவிகளை முதல்வர் ரங்கசாமி மீண்டும் வழங்காததால் பாஜகவினர் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து கேட்டபோது, பாஜகவினர் தனியாக வந்து கார்கில் வீரர்களுக்கு மரியாதை செலுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, முதல்வர் பங்கேற்ற அரசு நிகழ்ச்சி முடிந்த பின்னர், பாஜக மாநிலத் தலைவர் ராமலிங்கம் தலைமையில் அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் பேரவைத் தலைவர் செல்வம் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் தனியாக வந்து போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இதன் மூலம் கார்கில் வெற்றி தின நிகழ்ச்சியில் கூட்டணி கட்சிகளுக்கு இடையேயான அரசியல் வேறுபாடு மீண்டும் வெளிப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: BjpIndiaPolitical

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதையும் அவமதிப்பாக கருதக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்
  • தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் பாதிப்பு: மோடி அரசை மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடல்
  • சொத்துக் குவிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
  • சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் விவகாரத்தில் அமைச்சர் பதில் அளிக்கவில்லை என உதயநிதி குற்றச்சாட்டு
  • நெய்வேலியில் இரு தரப்பினர் மோதலில் இளைஞர் வெட்டிக்கொலை; 15 நாட்களில் 4 கொலைகளால் அச்சம்
  • ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 8,000 கனஅடியாக அதிகரிப்பு; மேட்டூர் அணை நீர்மட்டமும் உயர்வு
  • கல்லூரி மாணவர் அமுதன் கொலை குறித்து விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
  • கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ரூ.75 ஆயிரம் வரை முழுமையாகத் தள்ளுபடி
  • மாநகரப் போக்குவரத்தில் 1,797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிக்க பாமக தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு
  • வங்கதேசத்திடம் ஆஸ்திரேலியா வீழ்ந்ததால் அதிர்ச்சி; டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கேள்வி
Vice President C.P. Radhakrishnan

தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதையும் அவமதிப்பாக கருதக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்

ஆகஸ்ட் 17, 2026
Manickam Tagore

தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் பாதிப்பு: மோடி அரசை மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடல்

ஆகஸ்ட் 17, 2026
Rahul Gandhi

சொத்துக் குவிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp