நீட் மறுதேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு: தேசிய தேர்வு முகமை அதிரடி அறிவிப்பு!
கடந்த மாதம் முறைகேடு புகார்களால் ரத்து செய்யப்பட்ட இளநிலை நீட் தேர்வு, வரும் 21-ம் தேதி மீண்டும் நடைபெற உள்ளது. இந்நிலையில், நிர்வாக நடைமுறைகளால் தங்களின் தேர்வு எழுதும் நேரம் பாதிக்கப்படுவதாக மாணவர்கள் கவலை தெரிவித்ததை அடுத்து, இந்த மறுதேர்வுக்கு கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை (NTA) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் தேர்வு நேரமானது மதியம் 2:00 மணி முதல் மாலை 5:15 மணி வரை என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் வசதிக்காக வினாத்தாள் புத்தகத்தில் தோராயக் கணக்கீடு (Rough Work) செய்வதற்கான இடவசதியும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேர்வு முகமை தெரிவித்துள்ளது.






