ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு: இரு சிறார்கள் பிடிபட்டனர்!
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரிலிருந்து டெல்லி நோக்கிச் சென்ற சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்தபோது, ஃபிரோசாபாத் நகர் அருகே சமூக விரோதிகள் சிலர் ரயிலை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் ரயில் பெட்டியின் ஜன்னல் கண்ணாடி சேதமடைந்த போதிலும், யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்றும் மோகன் பாகவத் முழு பாதுகாப்புடன் இருப்பதாகவும் டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சகத்திற்கு ரயில்வே வாரியம் உடனடியாகத் தகவல் அனுப்பியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ரயில் மீது கல்வீசிய இரண்டு சிறார்களைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், தப்பியோடிய மற்றொரு சிறுவனைத் தேடி வருகின்றனர்.




