தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்: ஆளுநரின் செயலாளராக சஜ்ஜன் சிங் ஆர்.சவான் நியமனம்!
சென்னை:
தமிழகத்தில் நிர்வாக நலன் கருதி 16 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, ஆளுநரின் புதிய செயலாளராக சஜ்ஜன் சிங் ஆர்.சவான் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், உயர்கல்வித்துறை செயலாளராக ராஷ்மி சித்தார்த்தும், நில சீர்திருத்தத்துறை செயலாளராக ஹர் சஹாய் மீனாவும் பொறுப்பேற்க உள்ளனர். பால்வளத்துறை ஆணையராக அஜித் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாவட்டங்களைப் பொறுத்தவரை, தென்காசி மாவட்ட ஆட்சியராக ரஞ்சித் சிங்கும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக துர்கா மூர்த்தியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பிரிவுகளில், சென்னை மாநகராட்சி இணை ஆணையராக சரவணனும், கரூர் மாநகராட்சி ஆணையராக பிரத்விராஜும், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக தீபனா விஸ்வேஸ்வரியும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் தேனி மாவட்ட ஊரக மேம்பாட்டு ஆணையராக ரஜத் பீட்டன் நியமிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.




