ஆன்மீக நகரான வாரணாசியில் பிரம்மாண்டமான முறையில் 130 அடி உயர சிவலிங்கம் நிறுவப்பட உள்ளது!
வாரணாசி: உலகப் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், பக்திப் பரவசத்தை ஏற்படுத்தும் வகையில் பிரம்மாண்டமான முறையில் 130 அடி உயர சிவலிங்கம் நிறுவப்பட உள்ளது. இதற்கான ஆரம்பகட்டப் பணிகள் மற்றும் வடிவமைப்புகள் தீவிரமாகத் தொடங்கப்பட்டுள்ளன.
காசி விஸ்வநாதர் ஆலயத்தைக் காண நாடு முழுவதிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் வாரணாசிக்கு வருகை தரும் நிலையில், அங்கு அமையவிருக்கும் இந்த மிகப்பாரிய சிவலிங்கம் ஆன்மீகக் காதலர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் மேலும் ஈர்க்கும் ஒரு முக்கிய அடையாளமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரம்மாண்ட ஆன்மீகத் திட்டம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் எனத் தெரிகிறது.




