தோல்வி பயத்தில் பணத்தை வாரி இறைக்கும் திமுக: தமிழகம் முழுவதும் பணப்பட்டுவாடா என எதிர்க்கட்சிகள் புகார்!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தோல்வி உறுதியாகிவிட்டதாக உளவுத்துறை தகவல் வெளியாகியுள்ள நிலையில், எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் திமுகவினர் மாநிலம் முழுவதும் பணத்தைத் தண்ணீராக வாரி இறைப்பதாக எதிர்க்கட்சிகள் சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.
உளவுத்துறை தகவலால் திமுக தலைமை கடும் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், 234 தொகுதிகளிலும் இறுதிக்கட்ட முயற்சியாகப் பணப்பட்டுவாடா தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, சென்னை வில்லிவாக்கம், கோவை தெற்கு உள்ளிட்ட பகுதிகளில் ஒரு வாக்குக்கு ஆயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை விநியோகம் செய்யப்படுவதாகவும், பல ஆயிரம் கோடி ரூபாய் திமுக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளுங்கட்சியினர் என்பதால் இந்தப் பணப்பட்டுவாடாவைப் போலீசார் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்ப்பதாகவும், அதிகாரிகளும் இதற்கு உடந்தையாக இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன. இது குறித்து தேர்தல் அலுவலர்களிடம் தொகுதி வாரியாகப் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. தேர்தல் நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்யவும், இந்தப் பணப்பட்டுவாடாவுக்குக் கடிவாளம் போடவும் தேர்தல் ஆணையம் தனது கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.



