மகளிர் இடஒதுக்கீடு மசோதா: பிரதமருக்குப் பாராட்டு தெரிவித்து முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் கடிதம்!
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவிற்கு ஆதரவு தெரிவித்து, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவைக் கொண்டு வந்த மத்திய அரசின் முயற்சியைப் பாராட்டியுள்ள அவர், இது ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் சட்டத்தை இயற்றும் அதிகார அமைப்புகளில் பெண்களின் பங்களிப்பு கணிசமாக அதிகரிக்கும் என்றும், இது இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் தனது கடிதத்தில் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். பெண்களின் அதிகாரப் பகிர்வுக்கு வழிவகுக்கும் இந்த முன்னெடுப்பு, நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய மைல்கல்லாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





