அமெரிக்கா – ஈரான் போர் விரைவில் முடிவு: “மறுசீரமைக்க 20 ஆண்டுகள் ஆகும்” – அதிபர் ட்ரம்ப் அதிரடி!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், விரைவில் இது முடிவுக்கு வரும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில், ஈரான் மீதான தாக்குதல்களை இப்போதே நிறுத்தினால்கூட, அந்த நாடு சிதைந்துள்ள தனது உட்கட்டமைப்புகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவரக் குறைந்தது 20 ஆண்டுகள் வரை ஆகும் என்று குறிப்பிட்டார்.
தற்போதைய போர்ச் சூழலில் ஈரான் கடும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் எனக் கூறினார். இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முயற்சி செய்து வரும் நிலையில், ட்ரம்ப்பின் இந்தத் துணிச்சலான கருத்து சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது






