வடஇந்திய தொழிலாளருக்கு நடந்த தாக்குதல் – அண்ணாமலை கடும் கண்டிப்பு
ஈரோடு அருகே வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரின் துரித உணவகத்தை காவலர் ஒருவர் தாக்கி சேதப்படுத்திய சம்பவத்திற்கு, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊழல் மலிந்த திமுக ஆட்சியில் வடமாநில மக்கள்மீது தாக்குதல் நடத்தப்படுவது புதிதான ஒன்றல்ல என்றும், தமிழகத்திற்கு வேலை தேடி வரும் வடமாநில தொழிலாளர்கள் உடல் ரீதியாகவும், மன உளைச்சலுக்கும் உள்ளாக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தமிழகத்தின் பொருளாதார முன்னேற்றத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்றும், அவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் இனியாவது முழுமையாக தடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மாநில அரசின் கடமை என்றும் அண்ணாமலை தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.