• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 17, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Spirituality

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம் – ஆந்திர அமைச்சர் பட்டு வஸ்திர காணிக்கை

athibantv by athibantv
நவம்பர் 18, 2025
in Spirituality
0
📢 WhatsApp Channel Join
👁️ 859 📋

திருப்பதிக்கு அருகிலுள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில், கார்த்திகை மாத வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தாயாருக்கு ஆந்திர மாநில அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனம் ராம்நாராயண் ரெட்டி பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்கினார்.

விழா மிகவும் கோலாகலமாக, விமரிசையாக நடைபெற்றது. முன்தினம் ஆகம விதிகளின் படி அங்குரார்ப்பன நிகழ்ச்சிகள் நடந்தது. இதன்பின், கோயிலில் உள்ள தங்கக் கொடி மரத்தில் யானை சின்னம் பொறித்த பிரம்மோற்சவ கொடியேற்றம் நடந்தது. வேத பண்டிதர்கள் வேதங்கள் ஓத, மங்கள வாத்தியங்கள் இசைக்க, பத்மாவதி தாயார் அருகில் உற்சவ முர்த்தி வைக்கப்பட்டு கொடியேற்றம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Related posts

சுசீந்தரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சித்திரை விசு கனி காணுதல்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு!

சுசீந்தரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சித்திரை விசு கனி காணுதல்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு!

ஏப்ரல் 14, 2026
தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்: தமிழகத்தின் முக்கிய கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு வழிபாடு!

தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்: தமிழகத்தின் முக்கிய கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு வழிபாடு!

ஏப்ரல் 14, 2026

நேற்றுமாலை, ஆந்திர அரசு சார்பில், அமைச்சர் ஆனம் ராம்நாராயண் ரெட்டி பட்டு வஸ்திரங்களை தலை மீது சுமந்து தேவஸ்தான ஆகம வல்லுநர்களுக்கு ஒப்படைத்தார்.

சின்ன சேஷ வாகன பவனி:

நேற்றிரவு, பத்மாவதி தாயார் சின்ன சேஷ வாகனத்தில் நகர்ந்து, 4 மாட வீதிகளில் பக்தர்களுக்கு அருள் பரப்பினார். வாகனத்திற்கு முன்பாக காளைகள், குதிரைகள், யானைகள் செல்லும் வழியாக, ஜீயர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் பாடி உடன் நடந்தனர். பின்னர், பல மாநிலங்களைச் சேர்ந்த நடனக் கலைஞர்கள் நடனமாடினர். மாட வீதிகளில் கூடியிருந்த பக்தர்கள் தாயாருக்கு ஆரத்தி செய்து வழிபட்டனர்.

மலர் கண்காட்சி:

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, திருச்சானூர் கோயிலுக்கு எதிரில் உள்ள வெள்ளிக்கிழமை தோட்டத்தில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினர் மற்றும் தோட்டக்கலை துறை இணைந்து மலர் கண்காட்சி அமைத்தனர். தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங் ரிப்பன் வெட்டி தொடங்கி, கண்காட்சி திறந்து வைத்தார். ஆயுர்வேத மற்றும் சிற்பக்லை கண்காட்சிகள் பக்தர்களை கவர்ந்தன.

ஜொலிக்கும் திருச்சானூர்:

விழா 17-ம் தேதி தொடங்கி, 25-ம் தேதி வரை 9 நாட்கள் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. முகப்பு கோபுரம் மற்றும் முக்கிய இடங்களில் மின் விளக்கு, தோரணங்கள் மற்றும் மலர் அலங்காரங்கள் கண்ணை கவரும் விதமாக அமைக்கப்பட்டுள்ளன.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Spirituality
Previous Post

இயக்குநர் ராஜமவுலி பேச்சால் சர்ச்சை – “எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை”

Next Post

ஷுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதி – தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் சந்தேகம்

Next Post

ஷுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதி – தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் சந்தேகம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் டி.டி. பீரவின் தலைமறைவு? பல கோடி ரூபாய் மோசடி புகாரால் பரபரப்பு!

விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் டி.டி. பீரவின் தலைமறைவு? பல கோடி ரூபாய் மோசடி புகாரால் பரபரப்பு!

ஏப்ரல் 17, 2026
ஆவடியில் பாஜக வேட்பாளர் ராஜசிம்ம மகேந்திரா சூறாவளிப் பிரச்சாரம்: 2 டன் மலர் தூவி வாக்காளர்கள் உற்சாக வரவேற்பு!

ஆவடியில் பாஜக வேட்பாளர் ராஜசிம்ம மகேந்திரா சூறாவளிப் பிரச்சாரம்: 2 டன் மலர் தூவி வாக்காளர்கள் உற்சாக வரவேற்பு!

ஏப்ரல் 17, 2026
திருப்பூரில் பரபரப்பு: ரூ. 8,000 டோக்கன் விநியோகித்த திமுகவினர் சிறைபிடிப்பு – அதிகாரிகளிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

திருப்பூரில் பரபரப்பு: ரூ. 8,000 டோக்கன் விநியோகித்த திமுகவினர் சிறைபிடிப்பு – அதிகாரிகளிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

ஏப்ரல் 17, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் டி.டி. பீரவின் தலைமறைவு? பல கோடி ரூபாய் மோசடி புகாரால் பரபரப்பு!
  • ஆவடியில் பாஜக வேட்பாளர் ராஜசிம்ம மகேந்திரா சூறாவளிப் பிரச்சாரம்: 2 டன் மலர் தூவி வாக்காளர்கள் உற்சாக வரவேற்பு!
  • திருப்பூரில் பரபரப்பு: ரூ. 8,000 டோக்கன் விநியோகித்த திமுகவினர் சிறைபிடிப்பு – அதிகாரிகளிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் டி.டி. பீரவின் தலைமறைவு? பல கோடி ரூபாய் மோசடி புகாரால் பரபரப்பு!

விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் டி.டி. பீரவின் தலைமறைவு? பல கோடி ரூபாய் மோசடி புகாரால் பரபரப்பு!

ஏப்ரல் 17, 2026
ஆவடியில் பாஜக வேட்பாளர் ராஜசிம்ம மகேந்திரா சூறாவளிப் பிரச்சாரம்: 2 டன் மலர் தூவி வாக்காளர்கள் உற்சாக வரவேற்பு!

ஆவடியில் பாஜக வேட்பாளர் ராஜசிம்ம மகேந்திரா சூறாவளிப் பிரச்சாரம்: 2 டன் மலர் தூவி வாக்காளர்கள் உற்சாக வரவேற்பு!

ஏப்ரல் 17, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN