தமிழகத்தில் புதிய அமைச்சரவை விரிவாக்கம்: தவெக அரசின் 23 புதிய அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு!
சென்னை: தமிழகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அமைச்சரவை இன்று அதிகாரப்பூர்வமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சென்னை லோக்பவனில் நடைபெற்ற விழாவில், ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் புதிய அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இந்த அமைச்சரவை விரிவாக்கத்தின் மூலம் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக ஆட்சியில் பங்கேற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் கிள்ளியூர் எம்.எல்.ஏ எஸ். ராஜேஷ் குமார் மற்றும் மேலூர் எம்.எல்.ஏ பி. விஸ்வநாதன் உள்ளிட்ட 23 புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
புதிதாகப் பதவியேற்றுள்ள 23 அமைச்சர்கள் மற்றும் அவர்களின் தொகுதிகள் அடங்கிய முழுமையான அதிகாரப்பூர்வ பட்டியல் இதோ:
- ஸ்ரீநாத் (தூத்துக்குடி)
- கமலி S. (அவிநாசி)
- சி. விஜயலட்சுமி (குமாரபாளையம்)
- ஆர்.வி. ரஞ்சித்குமார் (காஞ்சிபுரம்)
- வினோத் (கும்பகோணம்)
- ராஜீவ் (திருவாடானை)
- பி. ராஜ்குமார் (கடலூர்)
- வி. காந்திராஜ் (அரக்கோணம்)
- மதன் ராஜா P. (ஒட்டப்பிடாரம்)
- ஜெகதீஸ்வரி K. (ராஜபாளையம்)
- ராஜேஷ் குமார் S. (கிள்ளியூர் – காங்கிரஸ்)
- எம். விஜய் பாலாஜி (ஈரோடு கிழக்கு)
- லோகேஷ் தமிழ் செல்வன் D. (இராசிபுரம்)
- விஜய் தமிழன் பார்த்திபன் A. (சேலம் தெற்கு)
- ரமேஷ் (ஸ்ரீரங்கம்)
- பி. விஸ்வநாதன் (மேலூர் – காங்கிரஸ்)
- குமார் R. (வேளச்சேரி)
- தென்னரசு K. (ஸ்ரீபெரும்புதூர்)
- வி. சம்பத் குமார் (கோவை வடக்கு)
- முகமது ஃபர்வாஸ் J. (அறந்தாங்கி)
- டி. சரத்குமார் (தாம்பரம்)
- என். மரிய வில்சன் (ஆர்.கே. நகர்)
- விக்னேஷ் K. (கிணத்துக்கடவு)
இந்த புதிய விரிவாக்கத்தின் மூலம், தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக அமைச்சரவையில் நான்கு பெண் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் (துறைகள்) ஒதுக்கீடு குறித்த விவரங்கள் முதலமைச்சர் பரிந்துரையின் பேரில் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.




