அடையாறு ஆற்றில் குதித்து பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை: திரைத்துறை அதிர்ச்சி!
சென்னை:
தமிழ் திரையுலகின் பிரபல மூத்த தயாரிப்பாளரான கே.ராஜன், சென்னையில் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அவர், தனது கார் ஓட்டுநருடன் அடையாறு பகுதிக்குச் சென்றுள்ளார். திரு.வி.க பாலம் அருகே கார் சென்றபோது, ஓட்டுநரிடம் வண்டியை நிறுத்துமாறு கூறிய கே.ராஜன், தான் சிறிது நேரம் நடைபயிற்சி (Walk) மேற்கொண்டு வருவதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
ஆனால், பாலத்தின் மீது நடந்து சென்ற அவர், எதிர்பாராத விதமாக திடீரென ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அடையாறு போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் ஆற்றில் இருந்து அவரது உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கே.ராஜனின் இந்த அதிரடி முடிவிற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், எப்போதும் துணிச்சலாகப் பேசக்கூடிய அவரது மறைவுக்குத் திரைத்துறையினரும், அரசியல் தலைவர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்






