“கஜானாவைத் துடைத்துவிட்டுச் சென்றுள்ளனர்” – திமுக அரசு மீது முதல்வர் விஜய் நேரடித் தாக்குதல்!
சென்னை: தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு ஆற்றிய முதல் உரையில், முந்தைய திமுக அரசின் நிதி மேலாண்மையை முதலமைச்சர் விஜய் கடுமையாகச் சாடினார். தமிழகத்தின் தற்போதைய கடன் நிலை குறித்துப் பேசிய அவர், “கடந்த அரசு சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் கடனை தமிழகத்தின் மீது சுமத்திவிட்டு, கஜானாவை முழுவதுமாகத் துடைத்துவிட்டுச் சென்றுள்ளது” என்று அதிரடியாகக் குற்றம் சாட்டினார்.
மேலும், இவ்வளவு இக்கட்டான மற்றும் சவாலான நிதிச் சூழலில்தான் தனது அரசு பொறுப்பேற்றுள்ளதாகவும், இந்தத் தடைகளைத் தாண்டியே மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் அவர் தனது உரையில் வேதனையுடன் குறிப்பிட்டார். இந்த நேரடித் தாக்குதல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




