தமிழகத்தில் அதிமுக தலைமையிலான என்டிஏ ஆட்சி அமைய வேண்டும்: மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி வேண்டுகோள்!
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து, வடவள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டின் தாய்க்குலத்தைப் பாதுகாத்திட பொதுமக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சுரேஷ் கோபி, ஜனநாயகத்தின் உயரிய இடமான நாடாளுமன்றத்திற்கு உரிய மரியாதை அளிக்காதவர்களுக்கு, இந்தத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டி தண்டனை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.




