திருச்சி கிழக்கு தொகுதியில் பரபரப்பு: பிரச்சாரத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் லியோனி மீது கண்ணாடி பாட்டில் வீச்சு!
திருச்சி கிழக்குத் தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து, கீழப்புதூர் அரசமரத்தடியில் திண்டுக்கல் லியோனி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென மர்ம நபர்கள் அவரை நோக்கி கண்ணாடி பாட்டிலை வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அந்தப் பாட்டில் லியோனி மீது படாமல், அவர் நின்றிருந்த பரப்புரை வாகனத்தின் மீது பட்டு உடைந்து தெறித்தது. இந்தத் திடீர் தாக்குதலால் பிரச்சாரக் கூட்டத்தில் பதற்றம் நிலவிய நிலையில், போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



