சுரண்டிப் பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான போர்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் தாக்கு!
தமிழகத்தில் தற்போது நடைபெறவுள்ள தேர்தல், மாநிலத்தைச் சுரண்டிப் பிழைக்கும் ஒரு குடும்பத்திற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் இடையே நடக்கும் தேர்தல் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கரூரில் வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய அவர், எதிரிகளை எப்படி வீழ்த்த வேண்டும் என்ற யுக்தி அதிமுகவிற்கு நன்றாகவே தெரியும் என்று முழங்கினார்.
திமுகவினர் மக்களின் ரத்தத்தைக் கூட உறிஞ்சி விடுவார்கள் என்று விமர்சித்த அவர், செந்தில் பாலாஜியை வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் வித்தை காட்டிக் கொண்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டினார். மேலும், அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடும் அதிகாரிகள் எதிர்காலத்தில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று எச்சரித்த பழனிசாமி, மக்களைப் பட்டியில் அடைக்கும் அரசியல் கலாச்சாரம் கொண்ட கட்சி தமிழகத்திற்குத் தேவையா? என்றும் கேள்வி எழுப்பினார்.




