“ஊழல் ஆட்சியை அகற்ற மக்கள் தயார்” – தளியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி ஆவேசப் பேச்சு!
தமிழகத்தில் நிலவும் சமூக சீர்கேட்டைத் தடுக்கவும், திமுகவின் ஊழல் ஆட்சியை அகற்றவும் பொதுமக்கள் தற்போதே தயாராகிவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பாஜக வேட்பாளர் நாகேஷ் குமாரை அறிமுகப்படுத்தும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய கே.பி. முனுசாமி, தமிழகத்தில் நடக்கும் குடும்ப ஆட்சிக்கு மக்கள் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சியில் தமிழகத்தின் சட்டம்–ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுள்ளதாகவும், குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழலை இந்த அரசு உருவாக்கியுள்ளதாகவும் கடுமையாக விமர்சித்தார். இந்த அறிமுகக் கூட்டத்தில் அதிமுக, பாமக, அமமுக, ஐஜேகே மற்றும் புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட என்டிஏ கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்றுத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.




