• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 19, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

அதிகாரிகளின் அலட்சியம்: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

athibantv by athibantv
பிப்ரவரி 28, 2026
in Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 861 📋

அதிகாரிகளின் அலட்சியம்: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சென்னை: நீதிமன்ற உத்தரவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டே காலதாமதம் செய்யும் அரசு அதிகாரிகள், எதிர்தரப்பினருக்கு உடந்தையாகச் செயல்படுகிறார்களா என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் ரகசிய விசாரணை நடத்தத் தமிழக தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை முகப்பேரில் சாலை அமைப்பதற்காகக் கையகப்படுத்தப்பட்ட 27 சென்ட் நிலத்திற்கு உரிய இழப்பீடு கோரி தனியார் பள்ளி ஒன்று வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த 2021-ம் ஆண்டு அந்த நிலத்திற்கு உரிய இழப்பீட்டை வழங்க அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து சுமார் நான்கு ஆண்டுகள் கழித்துத் தற்போது அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Related posts

“திமுக அரசு ஒரு தனியார் நிறுவனம்; ஸ்டாலின் குடும்பத்தினர் மீது பியூஷ் கோயல் கடும் தாக்கு!” – உதகையில் அனல் பறந்த பரப்புரை!

“திமுக அரசு ஒரு தனியார் நிறுவனம்; ஸ்டாலின் குடும்பத்தினர் மீது பியூஷ் கோயல் கடும் தாக்கு!” – உதகையில் அனல் பறந்த பரப்புரை!

ஏப்ரல் 18, 2026
பொன்னேரியில் ராகுல் காந்தி பேச்சு: பாதியிலேயே கலைந்து சென்ற பொதுமக்கள் – வெறிச்சோடிய நாற்காலிகள்!

பொன்னேரியில் ராகுல் காந்தி பேச்சு: பாதியிலேயே கலைந்து சென்ற பொதுமக்கள் – வெறிச்சோடிய நாற்காலிகள்!

ஏப்ரல் 18, 2026

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்துக் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. “அரசின் கோப்புகளைக் கையாளும் அதிகாரிகள் மிகுந்த சோம்பேறித்தனத்துடன் உள்ளனர். இத்தகைய செயலற்ற தன்மையால் ஏற்பட்டுள்ள காலதாமதத்தை மன்னிக்க எந்தக் காரணமும் இல்லை” எனக் கூறி அரசின் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

மேலும் நீதிபதிகள் கூறுகையில், “பல மேல்முறையீட்டு வழக்குகள் நொண்டிச் சாக்குகளைக் கூறி, நீண்ட காலதாமதத்திற்குப் பிறகே தாக்கல் செய்யப்படுகின்றன. இதற்கு அதிகாரிகளின் அலட்சியம் அல்லது அவர்கள் எதிர்தரப்பினருக்குச் சாதகமாகச் செயல்படுவதே காரணமாக இருக்க முடியும்” எனச் சுட்டிக்காட்டினர்.

எனவே, இதுபோன்ற காலதாமதங்களுக்குப் பின்னால் அதிகாரிகளின் முறைகேடுகள் ஏதேனும் ஒளிந்துள்ளதா என்பதை லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) மூலம் ரகசியமாகப் புலனாய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனத் தமிழக தலைமைச் செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். நீதிமன்றத்தின் இந்த அதிரடி நடவடிக்கை அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

இந்தியாவில் சாட்டிலைட் இணையப் புரட்சி: ஸ்டார்லிங்க், ஜியோ உள்ளிட்ட 3 நிறுவனங்களுக்கு உரிமம்!

Next Post

கும்பகோணத்தில் பரபரப்பு: “ரூ.3 லட்சம் பட்டுப்புடவைக்கு பணம் தரவில்லை” – ஓபிஎஸ்-க்கு எதிராக அதிமுக பிரமுகர் போஸ்டர்!

Next Post

கும்பகோணத்தில் பரபரப்பு: "ரூ.3 லட்சம் பட்டுப்புடவைக்கு பணம் தரவில்லை" - ஓபிஎஸ்-க்கு எதிராக அதிமுக பிரமுகர் போஸ்டர்!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“திமுக அரசு ஒரு தனியார் நிறுவனம்; ஸ்டாலின் குடும்பத்தினர் மீது பியூஷ் கோயல் கடும் தாக்கு!” – உதகையில் அனல் பறந்த பரப்புரை!

“திமுக அரசு ஒரு தனியார் நிறுவனம்; ஸ்டாலின் குடும்பத்தினர் மீது பியூஷ் கோயல் கடும் தாக்கு!” – உதகையில் அனல் பறந்த பரப்புரை!

ஏப்ரல் 18, 2026
“பெண்களுக்கு இழைக்கப்பட்ட தேசத்துரோகம்” – எதிர்க்கட்சிகளைக் கண்டித்து ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரம்மாண்ட பேரணி!

“பெண்களுக்கு இழைக்கப்பட்ட தேசத்துரோகம்” – எதிர்க்கட்சிகளைக் கண்டித்து ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரம்மாண்ட பேரணி!

ஏப்ரல் 18, 2026
பொன்னேரியில் ராகுல் காந்தி பேச்சு: பாதியிலேயே கலைந்து சென்ற பொதுமக்கள் – வெறிச்சோடிய நாற்காலிகள்!

பொன்னேரியில் ராகுல் காந்தி பேச்சு: பாதியிலேயே கலைந்து சென்ற பொதுமக்கள் – வெறிச்சோடிய நாற்காலிகள்!

ஏப்ரல் 18, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “திமுக அரசு ஒரு தனியார் நிறுவனம்; ஸ்டாலின் குடும்பத்தினர் மீது பியூஷ் கோயல் கடும் தாக்கு!” – உதகையில் அனல் பறந்த பரப்புரை!
  • “பெண்களுக்கு இழைக்கப்பட்ட தேசத்துரோகம்” – எதிர்க்கட்சிகளைக் கண்டித்து ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரம்மாண்ட பேரணி!
  • பொன்னேரியில் ராகுல் காந்தி பேச்சு: பாதியிலேயே கலைந்து சென்ற பொதுமக்கள் – வெறிச்சோடிய நாற்காலிகள்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

“திமுக அரசு ஒரு தனியார் நிறுவனம்; ஸ்டாலின் குடும்பத்தினர் மீது பியூஷ் கோயல் கடும் தாக்கு!” – உதகையில் அனல் பறந்த பரப்புரை!

“திமுக அரசு ஒரு தனியார் நிறுவனம்; ஸ்டாலின் குடும்பத்தினர் மீது பியூஷ் கோயல் கடும் தாக்கு!” – உதகையில் அனல் பறந்த பரப்புரை!

ஏப்ரல் 18, 2026
“பெண்களுக்கு இழைக்கப்பட்ட தேசத்துரோகம்” – எதிர்க்கட்சிகளைக் கண்டித்து ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரம்மாண்ட பேரணி!

“பெண்களுக்கு இழைக்கப்பட்ட தேசத்துரோகம்” – எதிர்க்கட்சிகளைக் கண்டித்து ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரம்மாண்ட பேரணி!

ஏப்ரல் 18, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN