• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, மே 30, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Political

அரசுப் பள்ளி மாணவர்கள் என்றால் ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லையா? – நயினார் நாகேந்திரன் கேள்வி

athibantv by athibantv
பிப்ரவரி 10, 2026
in Political, Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 3.3K 🔥 📋

அரசுப் பள்ளி மாணவர்கள் என்றால் ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லையா? – நயினார் நாகேந்திரன் கேள்வி

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் குறித்து ஆளும் அரசு அலட்சியமாக நடந்து கொள்கிறதா என்ற கேள்வியை தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எழுப்பியுள்ளார்.

Related posts

“காலை 10 மணிக்குள் பயோமெட்ரிக் கட்டாயம், ஐடி கார்டு அனிவது கட்டாயம்” – தலைமைச் செயலகப் பணியாளர்களுக்குத் தமிழக அரசு அதிரடி உத்தரவு!

“காலை 10 மணிக்குள் பயோமெட்ரிக் கட்டாயம், ஐடி கார்டு அனிவது கட்டாயம்” – தலைமைச் செயலகப் பணியாளர்களுக்குத் தமிழக அரசு அதிரடி உத்தரவு!

மே 30, 2026
“இலவசமாகக் கட்டுமானப் பொருட்கள் கேட்டு மிரட்டல்” – கூலித் தொழிலாளியைத் தாக்கிய தவெக மாவட்ட நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

“இலவசமாகக் கட்டுமானப் பொருட்கள் கேட்டு மிரட்டல்” – கூலித் தொழிலாளியைத் தாக்கிய தவெக மாவட்ட நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

மே 30, 2026

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களிலேயே தமிழக அரசுப் பள்ளிகளில் விஷப்பூச்சி மற்றும் விஷப்பாம்பு தாக்குதலால் இரண்டு மாணவர்கள் உயிரிழந்த வேதனை இன்னும் மாறாத நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கீழத்தேனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த மற்றொரு சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த பள்ளியில் மாணவர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, மரக் கிளைகளின் வழியாக ஏறி மேல்நிலை நீர்த்தொட்டியை சுத்தம் செய்யும் காட்சிகள் வெளியாகி, பொதுமக்களை அச்சுறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். இளம் குழந்தைகள் நீரில் மூழ்கியோ அல்லது தவறி விழுந்தோ பெரும் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் அனைவருக்கும் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

ஆனால், ஏழை மாணவர்களின் பாதுகாப்பையும் மரியாதையையும் புறக்கணித்தது போல, “வேறு யாரும் கிடைக்கவில்லை” என்ற ஒரே காரணத்தை சொல்லி இந்த விவகாரத்தை பள்ளித் தலைமை ஆசிரியர் எளிதாக கடந்து விட்டதாக நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார்.

பணியாளர் பற்றாக்குறையை காரணமாக காட்டி, பள்ளி மாணவர்களைத் துப்புரவுப் பணிகளில் ஈடுபடுத்தும் துணிச்சல் ஆசிரியர்களுக்கு எங்கிருந்து வந்தது? இது ஊதியச் செலவை மிச்சப்படுத்த ஆளும் அரசு அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஏற்படுத்தியுள்ள நடைமுறையா? என்ற கேள்விகளையும் அவர் முன்வைத்துள்ளார்.

அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் பற்றி கவலைப்பட்ட பெற்றோர்கள், இப்போது தங்கள் பிள்ளைகள் உயிருடன் பள்ளியிலிருந்து வீடு திரும்புவார்களா என்ற அச்சத்தில் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது தான் “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்ற அரசின் முழக்கத்துக்கான விளக்கமா என்றும் அவர் வினவினார்.

மேலும், “அப்பா” என்ற அடைமொழியை விரும்பும் முதல்வர் ஸ்டாலின், இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுப்பாரா, அல்லது வழக்கம்போல் மௌனமாக இருப்பாரா? என்றும் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

சென்னையில் சாலை மறியல் நடத்திய வருவாய் துறை சங்க கூட்டமைப்பினர் கைது

Next Post

ராமநாதபுரத்தில் தேர்தல் முன்னிட்டு திமுக தரப்பில் இலவச பொருட்கள் வழங்கப்படுவதாக புகார்

Next Post

ராமநாதபுரத்தில் தேர்தல் முன்னிட்டு திமுக தரப்பில் இலவச பொருட்கள் வழங்கப்படுவதாக புகார்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

மருத்துவ உலகில் மாபெரும் மைல்கல் – ரோபோடிக் முறையில் வெற்றிகரமாகத் அறுவை சிகிச்சை செய்த இந்திய மருத்துவர்!

மே 30, 2026
“காலை 10 மணிக்குள் பயோமெட்ரிக் கட்டாயம், ஐடி கார்டு அனிவது கட்டாயம்” – தலைமைச் செயலகப் பணியாளர்களுக்குத் தமிழக அரசு அதிரடி உத்தரவு!

“காலை 10 மணிக்குள் பயோமெட்ரிக் கட்டாயம், ஐடி கார்டு அனிவது கட்டாயம்” – தலைமைச் செயலகப் பணியாளர்களுக்குத் தமிழக அரசு அதிரடி உத்தரவு!

மே 30, 2026
“இலவசமாகக் கட்டுமானப் பொருட்கள் கேட்டு மிரட்டல்” – கூலித் தொழிலாளியைத் தாக்கிய தவெக மாவட்ட நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

“இலவசமாகக் கட்டுமானப் பொருட்கள் கேட்டு மிரட்டல்” – கூலித் தொழிலாளியைத் தாக்கிய தவெக மாவட்ட நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

மே 30, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • மருத்துவ உலகில் மாபெரும் மைல்கல் – ரோபோடிக் முறையில் வெற்றிகரமாகத் அறுவை சிகிச்சை செய்த இந்திய மருத்துவர்!
  • “காலை 10 மணிக்குள் பயோமெட்ரிக் கட்டாயம், ஐடி கார்டு அனிவது கட்டாயம்” – தலைமைச் செயலகப் பணியாளர்களுக்குத் தமிழக அரசு அதிரடி உத்தரவு!
  • “இலவசமாகக் கட்டுமானப் பொருட்கள் கேட்டு மிரட்டல்” – கூலித் தொழிலாளியைத் தாக்கிய தவெக மாவட்ட நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

மருத்துவ உலகில் மாபெரும் மைல்கல் – ரோபோடிக் முறையில் வெற்றிகரமாகத் அறுவை சிகிச்சை செய்த இந்திய மருத்துவர்!

மே 30, 2026
“காலை 10 மணிக்குள் பயோமெட்ரிக் கட்டாயம், ஐடி கார்டு அனிவது கட்டாயம்” – தலைமைச் செயலகப் பணியாளர்களுக்குத் தமிழக அரசு அதிரடி உத்தரவு!

“காலை 10 மணிக்குள் பயோமெட்ரிக் கட்டாயம், ஐடி கார்டு அனிவது கட்டாயம்” – தலைமைச் செயலகப் பணியாளர்களுக்குத் தமிழக அரசு அதிரடி உத்தரவு!

மே 30, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN