• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, ஏப்ரல் 15, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Political

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் தீவிரமடையும் அரசியல் மோதல்

athibantv by athibantv
பிப்ரவரி 8, 2026
in Political, Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 731 📋

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் தீவிரமடையும் அரசியல் மோதல்

தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் பதற்றத்தைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையேயான மோதல் வெளிப்படையாகத் தீவிரமடைந்து வருகிறது. இண்டி கூட்டணியில் புதுச்சேரியில் தலைமை வகித்து வரும் காங்கிரஸ் கட்சியை ஓரங்கட்டிவிட்டு, அந்த இடத்தை திமுக கைப்பற்ற முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தமிழகத்தில் இண்டி கூட்டணிக்கு திமுக முன்னணியில் இருந்து செயல்பட்டு வந்தாலும், புதுச்சேரியில் இதுவரை அந்த பொறுப்பு காங்கிரஸ் கட்சியிடமே இருந்து வந்தது. ஆனால் சமீபகாலமாக, புதுச்சேரியிலும் கூட்டணித் தலைமை பொறுப்பை திமுக ஏற்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனுடன், திமுகவின் புதுச்சேரி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், “தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் திமுக ஆட்சி அமைக்கும்” என வெளியிட்டுள்ள கருத்துகள், அங்கு உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தலைவர்களிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.

Related posts

பீகாரில் பாஜக ஆட்சி: புதிய முதலமைச்சராக சாம்ராட் சவுத்ரி தேர்வு!

பீகாரில் பாஜக ஆட்சி: புதிய முதலமைச்சராக சாம்ராட் சவுத்ரி தேர்வு!

ஏப்ரல் 14, 2026
அமைச்சர் சேகர்பாபு மகன்களின் நிறுவனங்களில் ஐடி சோதனை நிறைவு!

அமைச்சர் சேகர்பாபு மகன்களின் நிறுவனங்களில் ஐடி சோதனை நிறைவு!

ஏப்ரல் 14, 2026

2000ஆம் ஆண்டுக்கு பிறகு புதுச்சேரியில் திமுக தனியாகவோ அல்லது திமுக பங்கேற்ற கூட்டணியோ ஆட்சியை பிடித்ததில்லை. இந்த பின்னணியில், அங்கு கட்சியின் செல்வாக்கை உயர்த்தும் நோக்கில் ஜெகத்ரட்சகன் தொடர்ந்து புதுச்சேரிக்கு சென்று திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனைகள் நடத்தி வருகிறார். ஆனால், இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்து, மற்ற கூட்டணி கட்சிகளுடன் மட்டும் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொத்தம் 30 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட புதுச்சேரியில், திமுகவுக்கு 6 எம்எல்ஏக்களும், காங்கிரசுக்கு 2 எம்எல்ஏக்களும் உள்ளனர். தேர்தல் தோல்விகளால் பலவீனமடைந்துள்ளதாக கூறப்படும் காங்கிரஸ் கட்சியின் தலைமையை ஏற்க கூட்டணி கட்சிகள் தயங்கும் நிலையில், அந்த வெற்றிடத்தை பயன்படுத்தி திமுக தலைமைப் பொறுப்பை கைப்பற்ற முயற்சிப்பதாக கூறப்படுகிறது. கூட்டணிக்கு திமுக தலைமையேற்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதும், காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் காங்கிரஸை கூட்டணியில் இருந்து விலக்க முயற்சிகள் நடந்து வருவதாக பேசப்படும் சூழலில், அதே போன்று புதுச்சேரியிலும் திமுக செயல்படுவது, கூட்டணி நெறிமுறைகளுக்கு எதிரானது என்ற விமர்சனத்தை எழுப்பியுள்ளது. தமிழகத்தில் தொகுதி பங்கீடு மற்றும் ஆட்சியில் பங்கு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து சர்ச்சையை எழுப்பிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், தற்போது புதுச்சேரி விவகாரத்தையும் தீவிரமாக கையில் எடுத்துள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ள அவர், 2014 தேர்தல் முடிவுகளை சுட்டிக்காட்டி, “26 சதவீத வாக்குவங்கி கொண்ட காங்கிரஸ் கூட்டணியை வழிநடத்த வேண்டுமா, அல்லது 8 சதவீத வாக்குவங்கி கொண்ட திமுக அந்த பொறுப்பை ஏற்க வேண்டுமா?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். இந்த பதிவு, இண்டி கூட்டணிக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை மேலும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

திமுக தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தாலும், எவ்வளவு அவமதிப்பு இருந்தாலும் திமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்ட சிலர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அடுத்த கட்ட தலைவர்கள் பலர், திமுக தங்களது மரியாதையை பாதிப்பதாகவும், அதை இனி சகிக்க முடியாது எனவும் வெளிப்படையாக எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளையும், கூட்டணிக்குள் சுமையாக மாறிய நிலையும் காரணமாக, காங்கிரஸை தமிழகத்தில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த அரசியல் அரங்கிலிருந்தே ஒதுக்க திமுக முயற்சி செய்கிறது என்ற கருத்தையும் அரசியல் ஆய்வாளர்கள் முன்வைத்து வருகின்றனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

பாரதிய பனியன் வியாபாரிகள் சங்கத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி

Next Post

கும்பாபிஷேக நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் – தவிப்பில் சிக்கிய அமைச்சர்

Next Post

கும்பாபிஷேக நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் – தவிப்பில் சிக்கிய அமைச்சர்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
டிஜிட்டல் புரட்சியில் திரிபுரா: காகிதமில்லா ‘இ-கேபினட்’ ஆக மாறியது மாநில அமைச்சரவை!

டிஜிட்டல் புரட்சியில் திரிபுரா: காகிதமில்லா ‘இ-கேபினட்’ ஆக மாறியது மாநில அமைச்சரவை!

ஏப்ரல் 14, 2026
இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகள்!

இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகள்!

ஏப்ரல் 14, 2026
அம்பேத்கர் பிறந்த நாள் – நாடாளுமன்ற வளாகத்தில் தலைவர்கள் மலர்தூவி மரியாதை!

அம்பேத்கர் பிறந்த நாள் – நாடாளுமன்ற வளாகத்தில் தலைவர்கள் மலர்தூவி மரியாதை!

ஏப்ரல் 14, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • டிஜிட்டல் புரட்சியில் திரிபுரா: காகிதமில்லா ‘இ-கேபினட்’ ஆக மாறியது மாநில அமைச்சரவை!
  • இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகள்!
  • அம்பேத்கர் பிறந்த நாள் – நாடாளுமன்ற வளாகத்தில் தலைவர்கள் மலர்தூவி மரியாதை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

டிஜிட்டல் புரட்சியில் திரிபுரா: காகிதமில்லா ‘இ-கேபினட்’ ஆக மாறியது மாநில அமைச்சரவை!

டிஜிட்டல் புரட்சியில் திரிபுரா: காகிதமில்லா ‘இ-கேபினட்’ ஆக மாறியது மாநில அமைச்சரவை!

ஏப்ரல் 14, 2026
இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகள்!

இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகள்!

ஏப்ரல் 14, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN