ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் மதுபோதையில் திமுக நிர்வாகி அடாவடி

Date:

ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் மதுபோதையில் திமுக நிர்வாகி அடாவடி

ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில், பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்பதாக குற்றம்சாட்டி, மதுபோதையில் திமுக நிர்வாகி ஒருவர் அதிகாரியின் நாற்காலியில் அமர்ந்து அடாவடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக நிர்வாகியான குப்பன் என்பவர், மது போதையில் பத்திரப்பதிவு அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, சார் பதிவாளர் நாற்காலியில் அமர்ந்ததுடன், மேஜை மீது காலையும் வைத்துக் கொண்டு கூச்சலிட்டதாக கூறப்படுகிறது.

பத்திரப்பதிவுக்காக ஒரு லட்சம் ரூபாய் வழங்கியபோதும், தன்னுடைய ஆவணங்களை வழங்காமல் சார் பதிவாளர் இழுத்தடிப்பதாக அவர் குற்றம்சாட்டினார். இந்த சம்பவம் சுமார் அரை மணி நேரம் நீடித்த நிலையில், அலுவலக ஊழியர்கள் இணைந்து அவரை வெளியேற்றினர்.

இந்த சம்பவத்துக்கான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகி மீது இதுவரை காவல் நிலையத்தில் எந்தவொரு புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்தாயிரம் ரூபாய் முதல் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் சூழலில், இந்த சம்பவம் மற்றும் திமுக நிர்வாகியின் கூற்றுகள் அந்த குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிரபல முல்தானி பேக்கரி உரிமையாளர் திடீர் மறைவு – அதிர்ச்சி

பிரபல முல்தானி பேக்கரி உரிமையாளர் திடீர் மறைவு – அதிர்ச்சி மகாராஷ்டிராவை சேர்ந்த...

வரும் 10-ம் தேதி திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் – பாஜக மகளிர் அணி அறிவிப்பு

வரும் 10-ம் தேதி திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...

“தேர்தல் களத்தில் எதிர்க்கட்சிகளின் உண்மை முகம் வெளிப்படும்” – வி.பி.துரைசாமி

“தேர்தல் களத்தில் எதிர்க்கட்சிகளின் உண்மை முகம் வெளிப்படும்” – வி.பி.துரைசாமி தமிழ்நாட்டை சர்வதேச...

கன்யாகுமரி முதல் காஷ்மீர் வரை விமானப்படையினரின் சைக்கிள் பயணம்

கன்யாகுமரி முதல் காஷ்மீர் வரை விமானப்படையினரின் சைக்கிள் பயணம் கன்யாகுமரியில் இருந்து காஷ்மீர்...