“அனைத்து இடங்களையும் முஸ்லிம் பெண்களுக்கே கொடுங்கள்” – அகிலேஷ் யாதவுக்கு அமித்ஷா பதிலடி!
நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்கள் மீதான விவாதத்தின் போது, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.
பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் முஸ்லிம் பெண்களுக்கு எனத் தனி உள்ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று அகிலேஷ் யாதவ் கோரிக்கை விடுத்தார். இதற்குப் பதிலளித்துப் பேசிய அமித்ஷா, இந்திய அரசியலமைப்பின்படி மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு இடமில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து அகிலேஷ் யாதவைச் சாடிய அமித்ஷா, “உங்களுக்கு முஸ்லிம் பெண்கள் மீது அவ்வளவு அக்கறை இருந்தால், உங்கள் கட்சி போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளையும் முஸ்லிம் பெண்களுக்கே ஒதுக்கீடு செய்யலாம்; அதற்கு எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று அதிரடியாகப் பதிலடி கொடுத்தார். தேர்தல் அரசியலில் மத ரீதியான உள்ஒதுக்கீட்டைக் கொண்டுவர முயற்சிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.



