வியாழக்கிழமை, ஆகஸ்ட் 20, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
No Result
View All Result
  • Login
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
AthibAn Tv | Tamil News

மீண்டும் தலைதூக்கும் அனகோண்டா” – ஸ்ரீசாந்த்-ஹர்பஜன் வீடியோ விவகாரம் குறித்து அஷ்வின் கண்டனம்

athibantv by athibantv
செப்டம்பர் 4, 2025
in Sports
A A
0
📢 WhatsApp Channel Join
👁️ 4.8K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

“மீண்டும் தலைதூக்கும் அனகோண்டா” – ஸ்ரீசாந்த்-ஹர்பஜன் வீடியோ விவகாரம் குறித்து அஷ்வின் கண்டனம்

2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரின் போது ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்தை அறைந்த சம்பவம் அனைவரும் நினைவில் வைத்திருப்பார்கள். ‘ஸ்லாப்கேட்’ என்று அழைக்கப்படும் அந்தச் சம்பவத்தின் வீடியோவை 18 ஆண்டுகள் கழித்து லலித் மோடி – மைக்கேல் கிளார்க் வெளியிட்டதால், மீண்டும் பெரிய சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த வீடியோவை வெளியிட்டதைக் கடுமையாக விமர்சித்துள்ள அஷ்வின், அதனை “மீண்டும் தலை தூக்கும் அனகோண்டா” என்று குறிப்பிட்டுள்ளார். தனது யூடியூப் சேனலில் அவர் கூறியதாவது:

Related posts

India defeated Zimbabwe by 90 runs and won the T20 series.

காலே டெஸ்டில் இலங்கையை 165 ரன்களில் வீழ்த்தியது இந்தியா; 10 விக்கெட் வீழ்த்தி மானவ் சுதார் அசத்தல்

ஆகஸ்ட் 19, 2026
India wins in junior hockey.

உலகக் கோப்பை ஹாக்கி: இங்கிலாந்திடம் 2-4 என இந்தியா தோல்வி; பாகிஸ்தானுடன் நாளை மோதல்

ஆகஸ்ட் 18, 2026

“அனகோண்டாவின் தலை மீண்டும் மீண்டும் மேலெழும்புகிறது. இன்றைய உலகில் எதுவாக இருந்தாலும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வெளியே வருகிறது. அதனால் இப்படிப்பட்ட சம்பவங்கள் மீண்டும் மீண்டும் வெளிச்சத்திற்கு வரும். ஆனால், இந்த சம்பவம் ஹர்பஜனுக்கும் ஸ்ரீசாந்துக்கும் பெருமை சேர்க்கும் ஒன்றல்ல. அப்படியிருக்கையில் அதை ஏன் மீண்டும் வெளியிட வேண்டும்?

இருவரும் தவறை ஒப்புக்கொண்டு, மன்னிப்பு கேட்டு கடந்து விட்ட விஷயம் இது. ஹர்பஜனே நேரில் வந்து இதற்காக வருந்தினார். தவறு செய்தால் அதனுடன் வாழ வேண்டியது தான். அதை மீண்டும் கிளறிக் காட்டுவதில் எந்த அர்த்தமும் இல்லை. வீட்டிற்குள் கூட நம்மில் பலர் சண்டையிடுவோம்; ஆனால் அது வெளியே வருவதில்லை.

அதனால் முடிந்து போன விஷயத்தில் யாரும் தார்மீக காவலர் போல் நடிக்கக் கூடாது. அந்த இருவரும் அதை கடந்துவிட்டார்கள். மற்றவர்களும் அதைப் போலவே விட வேண்டும்.” என அஷ்வின் கூறினார்.

இதற்கிடையில், அந்த வீடியோவை வெளியிட்டதை ஸ்ரீசாந்தின் மனைவி புவனேஸ்வரி கடுமையாக எதிர்த்துள்ளார். இன்ஸ்டாகிராமில் பதிவு வெளியிட்ட அவர்,

“ஷேம் ஆன் யூ லலித் மோடி, மைக்கேல் கிளார்க்! உங்கள் பிரசாரத்திற்காக, எப்போதோ முடிந்து போன சம்பவத்தின் வீடியோவை இப்போது வெளியிடுகிறீர்களா? இது மனிதநேயமற்ற, இதயமற்ற செயல். இன்று ஸ்ரீசாந்தும், ஹர்பஜனும் தந்தையாகி, பழைய சம்பவத்தை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பழைய காயத்தைக் கிளறுவது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.

அதேபோல், ஹர்பஜன் சிங்கும் இதை கடுமையாக கண்டித்தார்.

“அந்த வீடியோவை வெளியிட்டது மிகப்பெரிய தவறு. யாரும் இப்படிச் செய்யக் கூடாது. மக்கள் ஏற்கனவே மறந்து விட்ட சம்பவத்தை நினைவூட்டுவது தேவையற்றது. நான் அந்த நிகழ்வை நினைத்தாலே தலைகுனிகிறேன். தவறுகள் நடக்கவே செய்யும்; அதை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வரக்கூடாது.” என்று ஹர்பஜன் தெரிவித்தார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Sports

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • உத்தரப் பிரதேச நிறுவனத்துக்கு போக்குவரத்து நடத்துநர் பணி ஒப்பந்தம்: சீமான் கடும் எதிர்ப்பு
  • நெல்லை எக்ஸ்பிரஸ் ரூ.4 கோடி வழக்கை ரத்து செய்யக்கூடாது: சிபிசிஐடி உயர் நீதிமன்றத்தில் வலியுறுத்தல்
  • மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகாவை அனுமதிக்க மாட்டோம்: தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் உறுதி
  • காலே டெஸ்டில் இலங்கையை 165 ரன்களில் வீழ்த்தியது இந்தியா; 10 விக்கெட் வீழ்த்தி மானவ் சுதார் அசத்தல்
  • முதல்வர் அறை புதுப்பிப்பு பணிகளின் உண்மைக் காரணத்தையும் டெண்டர் விவரங்களையும் வெளியிட வேண்டும்: நயினார்
  • எம்எல்ஏக்களுக்கு அரசு வசதிகள் வழங்கும் முதல்வர் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என மாணிக்கம் தாகூர் கருத்து
  • எம்எல்ஏக்களுக்கு கார் வழங்கும் அறிவிப்புக்கு விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு
  • மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்பதைத் தடுக்கும் சுற்றறிக்கை வாபஸ்: அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்
  • “எதிர்ப்பு வந்ததும் அதிகாரிகள் மீது பழிபோட்டு தவெக அரசு பின்வாங்குகிறதா?”: கனிமொழி கேள்வி
  • வழிபாட்டுத் தலங்களில் யாருக்கும் பாகுபாடு காட்ட இடமில்லை: சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
Seeman NTK

உத்தரப் பிரதேச நிறுவனத்துக்கு போக்குவரத்து நடத்துநர் பணி ஒப்பந்தம்: சீமான் கடும் எதிர்ப்பு

ஆகஸ்ட் 19, 2026
Nainar Nagendran

நெல்லை எக்ஸ்பிரஸ் ரூ.4 கோடி வழக்கை ரத்து செய்யக்கூடாது: சிபிசிஐடி உயர் நீதிமன்றத்தில் வலியுறுத்தல்

ஆகஸ்ட் 19, 2026
“Securing Cauvery water from Karnataka is a major challenge” – Minister Anand explains in the Assembly.

மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகாவை அனுமதிக்க மாட்டோம்: தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் உறுதி

ஆகஸ்ட் 19, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© AthibAn TV
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp