• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, ஏப்ரல் 18, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home World

அதிகாரத்தை தன் வசப்படுத்திக் கொண்ட அசிம் முனீர்!

athibantv by athibantv
நவம்பர் 29, 2025
in World
0
📢 WhatsApp Channel Join
👁️ 2.2K 🔥 📋

அதிகாரத்தை தன் வசப்படுத்திக் கொண்ட அசிம் முனீர்!

பாகிஸ்தானில் நேரடி ராணுவ ஆட்சியை ஏற்படுத்தாமல், அரசியலமைப்பை திருத்துவதன் மூலம் தலைமை தளபதி அசிம் முனீருக்கு புதிய “Chief of Defence Forces” எனும் உயர் பதவி அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மூன்று படைகளும், அந்நாட்டின் அணு ஆயுதங்களின் கட்டுப்பாடும் ஒரே நபரின் ஆளுகைக்குள் சென்றதாக மதிப்பிடப்படுகிறது.

Related posts

ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை: நிலைகுலைந்த ஈரான் பொருளாதாரம் – அமெரிக்காவின் அதிரடியால் சரணடையும் சூழல்?

ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை: நிலைகுலைந்த ஈரான் பொருளாதாரம் – அமெரிக்காவின் அதிரடியால் சரணடையும் சூழல்?

ஏப்ரல் 17, 2026
அமெரிக்கா – ஈரான் போர் விரைவில் முடிவு: “மறுசீரமைக்க 20 ஆண்டுகள் ஆகும்” – அதிபர் ட்ரம்ப் அதிரடி!

அமெரிக்கா – ஈரான் போர் விரைவில் முடிவு: “மறுசீரமைக்க 20 ஆண்டுகள் ஆகும்” – அதிபர் ட்ரம்ப் அதிரடி!

ஏப்ரல் 15, 2026

பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை தளபதியான அசிம் முனீர், அந்த நாட்டின் முதல் “Chief of Defence Forces” ஆக பதவியேற்றதைத் தொடர்ந்து, ராணுவத்தின் அதிகார பரப்பு வரலாற்றிலேயே மிக உயர்ந்த நிலையில் உள்ளது. பாகிஸ்தானின் அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய 27-வது திருத்தத்தினாலேயே இந்தப் புதிய பொறுப்பு உருவாக்கப்பட்டது.

இந்தப் பதவியை ஏற்றதின் மூலம் அசிம் முனீர், ராணுவம், கடற்படை, விமானப்படை உள்ளிட்ட மூன்று படைகளின் உச்ச அதிகாரத்துடன் அடுத்த 5 ஆண்டுகள் அதிகாரத்தில் தொடரச் செய்யப்பட்டுள்ளது. 2022 நவம்பரில் ராணுவத் தளபதியாய்க் பொறுப்பேற்கும் முன், அவர் குவாட்டர் மாஸ்டர் ஜெனரல், குஜ்ரன்வாலா கோர் கமாண்டர், ராணுவ உளவுத்துறை தலைமை அதிகாரி மற்றும் ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவர் போன்ற முக்கிய பதவிகளில் பணியாற்றியிருந்தார்.

2019-இல் அப்போதைய பிரதமர் இம்ரான் கான், அவரை வெறும் 8 மாதங்களில் ஐஎஸ்ஐ தலைமைப் பதவியிலிருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது. அதன் காரணங்கள் இதுவரை வெளிவரவில்லை. பின்னர் இம்ரான் கான் பதவியிழந்தபோது உருவான ஷெஹ்பாஸ் ஷெரீஃப் அரசு, முனீரை மீண்டும் ராணுவத் தளபதியாக நியமித்தது.

இப்போது, அவர் “Chief of Defence Forces” என்ற இன்னும் உயர்ந்த நிலையை அடைந்து விட்டார். செனட் சபையில் கடந்த 1-ம் தேதி நிறைவேற்றப்பட்ட 27-வது திருத்தச் சட்டம், 1976-ல் ஜுல்பிகார் அலி புத்தோ உருவாக்கிய “Joint Chiefs of Staff Committee” தலைவரின் பதவியை முற்றிலுமாக ரத்து செய்து விட்டது.

1971 இந்தியா-பாகிஸ்தான் போரில் தோல்வியடைந்த பின்னர் உருவாக்கப்பட்ட அந்த அமைப்பு, அதன் இறுதி தலைவர் ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் ஓய்வு பெற்றபோது தானாகவே நிறுத்தப்பட்டதாகவும் கருதப்படுகிறது.

240 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட அணு சக்தி பாகிஸ்தான் உருவான 1947-ம் ஆண்டிலிருந்து, ராணுவ ஆட்சியும் குடியரசு ஆட்சியும் மாறி வந்தன. 1999-இல் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் ராணுவப் புரட்சியால் ஆட்சியைப் பிடித்து 2008 வரை அதிபராக இருந்தார். அதன் பிறகு குடியரசு ஆட்சி இருந்தாலும், அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் ராணுவத்தின் செல்வாக்கு குறையாமல் தொடர்ந்தது.

பாகிஸ்தானின் இந்த ஆட்சி அமைப்பை பல நிபுணர்கள் “கலப்பு ஆட்சி முறை” எனச் சொல்வதற்கு முக்கிய காரணமே ராணுவத்தின் நீண்டகால தாக்கம். இந்நிலையில் 27-வது திருத்தம், இருந்த சமநிலையையும் சிதைத்து ராணுவத்தின் வலிமையை மேலும் கூட்டியுள்ளதாகவும் விமர்சிக்கப்படுகிறது.

புதிய சட்டத்தின் படி, ராணுவத்தின் தலைமை தளபதிக்கு மற்ற இரு படைகளின் தளபதிகளை விட மேலான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்களின் முழு பொறுப்பும் ஒரே நபரின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனால் முப்படைகளின் நேரடி கட்டுப்பாடு அதிபர் மற்றும் அமைச்சரவை கைகளிலிருந்து விலகி, பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதியிடம் சென்று விட்டது. இந்தப் புதிய சட்டம் அமலாகியதால், அசிம் முனீரின் பதவிக்காலம் புதியதாகக் கணக்கிடப்பட்டு, குறைந்தபட்சம் 2030 வரை அவர் இந்தப் பொறுப்பில் நீடிப்பார்.

முன்னர் இருந்த சட்டப்படி அசிம் முனீர் இப்போது ஓய்வு பெற்றிருக்க வேண்டியவர். ஆனால் கடந்த ஆண்டில் முப்படைத் தளபதிகளின் பதவிக்காலம் 3 ஆண்டிலிருந்து 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டதால், அவர் 2027 நவம்பர் வரை தொடர வாய்ப்பு கிடைத்தது. தற்போது CDF பதவியால் இந்த காலம் மேலும் 3 ஆண்டுகள் கூடுகிறது.

அசிம் முனீருக்கு பாகிஸ்தான் அதிபருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், CDF பதவியால் அவர் மீது ஆயுள் முழுவதும் வழக்கு தொடர முடியாத உரிமையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதே பாதுகாப்பு நிலை விமானப்படை மற்றும் கடற்படை தளபதிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பதவிக்காலம் முடிந்தபோது, அசிம் முனீர் மீண்டும் தன்னை நியமிக்க கோரிக்கை வைத்தால், அதிபரும் பிரதமரும் அதை மறுப்பது கடினமே என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த திருத்தம், ராணுவத்துக்கு மேலாட்சி அளிக்கும் வகையில் இருக்கும் என்றும், முன்பு குடியரசு ஆட்சிக்குள் இருந்த பல அதிகாரங்கள் இப்போது CDF-க்கு மாற்றப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.

அதுபோல, அணு ஆயுத களஞ்சியத்தைக் கண்காணிக்கும் “National Strategic Command” தலைவரை நியமிக்கும் அதிகாரமும் இப்போது பெரும்பாலும் ராணுவத்தின் கைக்கு சென்றுள்ளது. இந்தப் பதவிக்கு ராணுவத்திலிருந்து நபர் தேர்வு செய்ய வேண்டும் எனவும், நீதியமைச்சர் CDF ஆலோசனைகளைப் பின்பற்றியே நியமனத்தைச் செய்ய வேண்டும் எனவும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழலில், CDF ஆக பொறுப்பேற்ற அசிம் முனீர் தற்போது பாகிஸ்தானில் மிகச் சக்தி வாய்ந்த நபராக மாறிவிட்டார் என்று ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் நயீம் காளித் தெரிவிக்கிறார். அரசியல் தலைவர்களே தமது குறுகிய நலன்களுக்காக பாகிஸ்தானின் நீண்டகால நலனை தானே ஆபத்தில் இட்டுவிட்டார்கள் என்றார்.

பாகிஸ்தானின் எதிர்காலம் வலுவான பொருளாதாரத்தையும், நிலையான அரசியல் அமைப்பையும் தேவைப்படுகின்ற நேரத்தில், இந்த இரண்டிலும் நாடு பின்னடைந்து வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த நிலையில், அசிம் முனீர் அரசியலமைப்பு திருத்தங்கள் மூலம் ராணுவத்தின் அதிகாரத்தை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு உயர்த்தி இருப்பது, அந்நாட்டின் எதிர்காலத்தை எப்படிப் பாதிக்கும் என்பது காத்திருந்து பார்க்க வேண்டிய விஷயமாக உள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: World
Previous Post

SIR படிவங்கள் திரும்ப பெறப்படாததற்கு பொதுமக்கள் சாலை மறியல் – சேலம்

Next Post

கோவை: சோதனை நிலையத்தில் ரூ.40 லட்சம் பணம் பறிமுதல் – ஒருவர் கைது!

Next Post

கோவை: சோதனை நிலையத்தில் ரூ.40 லட்சம் பணம் பறிமுதல் – ஒருவர் கைது!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: எதிர்க்கட்சிகளைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு என்டிஏ (NDA) திட்டம்!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: எதிர்க்கட்சிகளைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு என்டிஏ (NDA) திட்டம்!

ஏப்ரல் 18, 2026
“தோல்வி பயத்தால் கலவரத்தைத் தூண்ட திமுக முயற்சி” – இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்!

“தோல்வி பயத்தால் கலவரத்தைத் தூண்ட திமுக முயற்சி” – இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்!

ஏப்ரல் 18, 2026
இன்று தங்கம் விலை சற்று குறைவு…

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

ஏப்ரல் 18, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: எதிர்க்கட்சிகளைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு என்டிஏ (NDA) திட்டம்!
  • “தோல்வி பயத்தால் கலவரத்தைத் தூண்ட திமுக முயற்சி” – இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்!
  • இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: எதிர்க்கட்சிகளைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு என்டிஏ (NDA) திட்டம்!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: எதிர்க்கட்சிகளைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு என்டிஏ (NDA) திட்டம்!

ஏப்ரல் 18, 2026
“தோல்வி பயத்தால் கலவரத்தைத் தூண்ட திமுக முயற்சி” – இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்!

“தோல்வி பயத்தால் கலவரத்தைத் தூண்ட திமுக முயற்சி” – இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்!

ஏப்ரல் 18, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN